தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு 1,640 ரூபாய் குறைந்த நிலையில் இன்று மேலும் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன.? பார்ப்போம்...

குறைந்துவரும் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி, ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்தை கடந்து, 74,320 ரூபாய்க்கும், கிராம் விலை 9 ஆயிரத்தை கடந்து 9,290 ரூபாய்க்கும் விற்பனையாகி அதிர்ச்சி அளித்தது. அதற்கு அடுத்த நாளே அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை, சவரன் 72,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 24-ம் தேதி சற்று குறைந்து சவரன் 72,040 ரூபாய் என்ற விலையை எட்டிய தங்கம், 27-ம் தேதி வரை அதே விலையில் நீடித்தது.

28-ம் தேதி சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, 71,520 ரூபாய்க்கு விற்பனையாது. தொடர்ந்து, 29-ம் தேதி 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 71,840 ரூபாக்கு விற்பனையாது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 8,980 ரூபாயாக இருந்தது. தொடர்ந்து, அட்சய திருதியையான ஏப்ரல் 30-ம் தேதி அதே விலையில் நீடித்த தங்கம், நேற்று ஒரே நாளில் அதிரடியாக விலை குறைந்தது. 

அதன்படி, நேற்று கிராமிற்கு 205 குறைந்து ஒரு கிராம் 8,775 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 70,200 ரூபாய்க்கும் விற்பனையானது. இதைத் தொடர்ந்து, இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம் என்ன.?

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 20 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,755 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 160 ரூபாய் குறைந்து, சவரன் 70,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே விலையில் நீடிக்கும் வெள்ளி

வெள்ளியின் விலையை பொறுத்தவரை, நேற்று கிராமிற்கு 2 ரூபாய் குறைந்த நிலையில், இன்று அதே விலையில் நீடிக்கிறது. கடந்த மாதம் 26, 27 தேதிகளில் கிராம் 112 ரூபாயாக இந்த வெள்ளியின் விலை, 28-ம் தேதி ஒரு ரூபாய் குறைந்து, 111 ரூபாயாக விற்பனையானது. தொடர்ந்து 30-ம் தேதி வரை அதே விலையில் நீடித்த வெள்ளி, நேற்று கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 109 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று கிராம் 109 ரூபாய் என்ற அதேவிலையில் நீடிக்கிறது வெள்ளி.

தங்கத்தின் விலை இதேபோல் தொடர்ந்து குறைந்தால், நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாக இருக்கும்.

Read more
தூத்துக்குடியில் பயங்கரம்…! அண்ணன்-தம்பியை குழிதோண்டி புதைத்த மர்ம கும்பல்… மண்ணுக்குள் தெரிந்த கை.. வெளிவந்த உண்மை… பெரும் பரபரப்பு..!
Newspoint
GRT: தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பிளாட்டினம் விருதை வெல்லும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!
Newspoint
நான் ஆட்சியில் இருந்தால்... கவின் கொலை வழக்கில் சீமான் ஆவேச பேட்டி
Newspoint
“பணம் கொடுக்கலைன்னா போட்டோவை வெளியிடுவேன்”… தொடர் மிரட்டலால் மனம் உடைந்த 25 வயது மாணவி…தனது கையில் எழுதிவைத்துவிட்டு விபரீதம்..!!
Newspoint
Coolie : 36 ஆண்டுகளுக்குப் பின்… ரஜினிகாந்த்தின் 'கூலி' படம் குறித்து வெளியான அப்டேட்!
Newspoint
தமிழக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களால் தொடர் பாலியல் அத்துமீறல்... தமிழக அரசுதான் பொறுப்பு - பாஜக!
Newspoint
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி…வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்ற வடமாநில வாலிபர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….. போலீஸ் அதிரடி….!!
Newspoint
காதலித்து வீட்டோடு வந்த மாப்பிள்ளை…! மகளுடன் சேர்ந்து கொன்ற மாமனார், மாமியார்…. காட்டிக்கொடுத்த பேரன்…. பகீர் பின்னணி…!!
Newspoint
நாலு படிக்கட்டு ஏறினாலே மூச்சுத்திணறல் வருதா? இந்த சிக்கல்களாக இருக்கலாம்!
Newspoint
பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!
Newspoint