2025- 2026 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற்றது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7 ல் தொடங்கி மார்ச் 7 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.

இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் வெள்ளி அரைஞாண் கொடி அணிந்திருந்தார். அங்கிருந்த அதிகாரிகள் அந்த மாணவரை பரிசோதித்துவிட்டு, அவரை தேர்வு அறைக்குள் அனுமதிக்க மறுத்து உள்ளனர்.
அந்த மாணவர் எவ்வளவோ கூறியும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அந்த மாணவர் வெளியே வந்த நிலையில், அந்த மாணவனின் தந்தை, மாணவரின் இடுப்பில் இருந்த அரைஞாண் கொடியை அறுத்து அகற்றினார். அதன்பிறகு அவர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டார். நீட் தேர்வுக்காக மாணவர்கள் வருடக் கணக்கில் படித்து தயாராகி தேர்வுக்கு வந்துள்ள நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மற்ற தேர்வுகளைப் போல அல்லாமல், ஆண்டுதோறும் நீட் தேர்வின்போது மாணவ மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவதாக பெற்றோர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Read more
Rajinikanth: 50 வருட சினிமா பயணம்.. நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை!
Newspoint
தேசியக்கொடியுடன் கோவில் கோபுரத்தின் மீது ஏறி போராடியவர் கீழே விழுந்து பலி
Newspoint
திண்டுக்கல்: 176 செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 3,256 மாணவிகள் இணைந்து உலக சாதனை! | Photo Album
Newspoint
மனைவியை அடக்கம் செய்யும் போது கணவர் மறைவு.. 55 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதி..!
Newspoint
AR Murugadoss : மதராஸி படத்தின் கதை இதுதான்.. ஏ.ஆர். முருகதாஸ் கொடுத்த விளக்கம்!
Newspoint
லியோ சாதனையை முறியடிக்காத கூலி! ஆனால்... செம்ம அப்டேட்!
Newspoint
மழலையர் பள்ளிகளில் சமஸ்கிருத மொழி பாடம் கட்டாயம்! ராஜஸ்தான் அரசு உத்தரவு..!
Newspoint
அரசு பள்ளியில் அதிர்ச்சி…! பள்ளி சீருடையுடன் கட்டிட பணியில் ஈடுபட்ட மாணவர்களால் பரபரப்பு…. தலைமை ஆசிரியரின் விளக்கம்…!!
Newspoint
கோயில் கோபுரம் மீது தேசிய கொடியுடன் போராட்டம்.. கீழே இறங்கும் போது உயிரிழந்த சோகம்..
Newspoint
சிறுமிக்கு பாலியல் தொல்லை – மலையாள நடிகை கைது, 2-ம் நாளாக விசாரணை!
Newspoint