Tamil Nadu 12th Result 2025 Centum Scorers: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், ஆங்கிலத்தில் மட்டும் ஒருவர் கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்கவில்லை.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் மாணவர்கள் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவியர்கள் நூற்று நூறு என முழு மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.

ஆங்கிலம் மட்டும் தான் இல்லை..!

12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகளில், ஆங்கில பாடத்தில் மட்டுமே ஒருவர் கூட நூற்றுக்கு நூறு என முழு மதிப்பெண்கள் எடுக்கவில்லை. மற்றபடி அனைத்து பாடங்களில் முழு மதிப்பெண்களை எடுத்து அசத்தியுள்ளனர். அதிகபட்சமாக, கணினி அறிவியலில் 9 ஆயிரத்து 536 பேரும், குறைந்தபட்சமாக விலங்கியலில் 36 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். குறிப்பாக தமிழில் 135 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து வரலாறு படைத்துள்ளனர். ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 887 பேர் ஆவர். இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 ஆயிரத்து 853 பேர் ஆவர்.

பாடவாரியாக சென்டம் எடுத்தவர் விவரங்கள்:

வரிசை எண் பாடங்கள் தேர்ச்சி சதவிகிதம் (%) 100 மதிப்பெண் பெற்றவர்கள்
1 தமிழ் 99.15 135
2 இயற்பியல் 99.22 1,125
3 வேதியியல் 98.99 3,181
4 உயிரியல் 99.15 827
5 கணிதம் 99.16 3,022
6 தாவரவியல் 99.35 269
7 விலங்கியல் 99.51 36
8 கணினி அறிவியல் 99.73 9,536
9 வணிகவியல் 98.36 1,624
10 கணக்குப் பதிவியல் 97.36 1,240
11 பொருளியல் 98.17 556
12 கணினிப் பயன்பாடுகள் 99.78 4,208
13 வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 98.78 273

அரசுப்பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் இருந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 98.32 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து ஈரோட்டில் 96.88 சதவிகிதம் பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 95.64 சதவிகிதம் பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.06 சதவிகிதம் பேரும், கடலூர் மாவட்டத்தில் 94.99 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

Read more
“குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்“ எல்லாம் ‘தம்பி‘ படுத்தும் பாடு - வறுத்தெடுக்கும் இபிஎஸ்
Abplive
“போருக்கு எப்போதும் தயார்“ இந்திய விமானப்படை வெளியிட்ட அட்டகாசமான வீடியோவ பாருங்க
Abplive
விரைவில் சீறிப்பாய உள்ள புல்லட் ரயில்.. 300 கிமீ தூரத்திற்கு முடிந்தது பணிகள்.. வீடியோ
Abplive
சீனிவாசா கோவிந்தா பாடலை பயன்படுத்தினால் இதான் தண்டனை...திருப்பதி தேவஸ்தானம் அதிரடி
Abplive
பல் சொத்தை, ஈறு நோய்களைத் தடுக்க மூலிகை டூத் பேஸ்ட் உதவுமா?
Abplive
FMCG சந்தையில் ஆதிக்கும் செலுத்தும் டான்ட் காந்தி டூத் பேஸ்ட்.. பதஞ்சலி நிறுவனம் பெருமிதம்!
Abplive
சொந்த கனவுகள், லண்டனில் பெற்ற முதுகலைப் பட்டம், லட்சியம் எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தேன்..ஆர்த்தி ரவி வேதனை
Abplive
குட்டு வெளிவந்ததும் அப்பாவியாக நடித்த ரவி மோகன்...மடக்கி கேள்வி கேட்ட மனைவி ஆர்த்தி
Abplive
குழந்தைகளுக்காக உருகும் ரவி மோகன் ஏன் இதை செய்யவில்லை..கொக்கிப் போட்ட ஆர்த்தி ரவி
Abplive
Karthigai Deepam: உனக்கு வெட்கமா இல்லயா? மனதை உடைத்த சாமுண்டீஸ்வரி! முருகன் கோயிலில் பரமேஸ்வரி!
Abplive