தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின்கீழ் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் கடந்த மே 7ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க மே 27ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிப்பது எப்படி?

கலை மற்றும்‌ அறிவியல்‌ பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்‌ சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில்‌ பதிவு செய்யலாம்‌.

குறிப்பாக, https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்ய வேண்டும்.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இம்மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக்‌ கட்டணம்‌ - ரூ. 58/- 
பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2/- 

எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்‌ கட்டணம்‌ ஏதுமில்லை

பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ. 2/- மட்டும்‌

விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம்‌ இணையதள வாயிலாக செலுத்தலாம்‌. இணையதள வாயிலாகக்‌ கட்டணம்‌ செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்,‌ “The Director, Directorate of Collegiate Education, Chennai - 15” என்ற பெயரில்‌ வங்கி வரைவோலை மூலமாகவும்‌ அல்லது நேரடியாகவும்‌ செலுத்தலாம்‌.

தொடர்பு எண்கள்‌: 044 - 24343106, 044 - 24342911

இ மெயில் முகவரி: tngasa2025@gmail.com

Read more
Coolie : மோனிகா... லவ் யூ மோனிகா.. அனிருத் கை வைத்தாலே ஹிட் தான்.. கூலி இரண்டாவது சிங்கிள்
Abplive
51,000 இளைஞர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுக்கும் மோடி
Abplive
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது கோபம்.. லியோ படத்தில் நடித்தது தவறு.. சஞ்சய் தத் ஓபன் டாக்
Abplive
நடுக்கடலில் சிக்கிய அமெரிக்க கப்பல்.. உயிருக்கு போராடிய ஊழியர்கள்.. ஹீரோவாக மாறிய கடலோர காவல்படை
Abplive
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
Abplive
நடிகை வனிதா படத்தில் ராத்திரி சிவராத்திரி பாடல்.. இளையராஜா அவசர வழக்கு.. மீண்டும் காப்பிரைட் சர்ச்சை
Abplive
Kubera Ott Release : ஓடிடியில் வெளியாகும் தனுஷின் குபேரா...ரிலீஸ் தேதி அறிவிப்பு
Abplive
திருமணத்திற்கு முன்பே புற்றுநோய்.. முதல் மனைவி குறித்து மனம் உருகிய விஷ்ணு விஷால்
Abplive
Maareesan Story : மாரீசன் படத்தின் கதை இதுதான்..ஒப்பனாக சொன்ன படத்தின் இயக்குநர்
Abplive
இளையராஜா பாட்டில் கைவைத்த வனிதா விஜயகுமார்...ஹை கோர்ட்டில் பாய்ந்த வழக்கு
Abplive