இன்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் முடிவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 93.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 23 வது இடம் பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

2024 - 25 -ஆம் கல்வி ஆண்டுக்கான 10 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 -ஆம் தேதி வரை நடைபெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 -ம் தேதி தொடங்கி 28 -ஆம் தேதி நிறைவு பெற்றது.

தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 21 -ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்றது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் 11 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது.

வெளியான முடிவுகள்

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெளியாகியதில், 93.80 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 4,17, 183 பேரும், மாணவர்கள் 4,00,078 தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி விவரங்கள்

தேர்ச்சி பெற்றவர்கள் : 8,17,261 (93.80%)

மாணவியர் 4,17,183 (95.88%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 4,00,078 (91.74%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்விற்கு வருகைப்புரியாத 15,652 மாணவர்கள் 

கடந்த மார்ச் / ஏப்ரல் 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,94,264. தேர்ச்சி பெற்றோர் 8,18,743 தேர்ச்சி சதவிகிதம் 91.55%. கடந்த மார்ச் / ஏப்ரல் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 2.05% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.

டாப் 5 மாவட்டங்கள்:

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள்

1.சிவகங்கை - 97.49%

2.விருதுநகர் - 95.57%

3.கன்னியாகுமரி - 95.47%

4.திருச்சி - 95.42%

5.தூத்துக்குடி - 95.40%

கடந்த ஆண்டு 91.55% பேர் தேர்ச்சி 

முன்னதாக மாநிலக் கல்வி வாரியத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் பத்தாம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்‌ தேர்வு முடிவுகள்‌ மே 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 91.55% பேர் தேர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மயிலாடுதுறை மாவட்ட விபரம் 

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 6037 மாணவர்கள், மாணவிகள் 6112 என 12,149 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 5530 மாணவர்களும், 5878 மாணவிகள் என மொத்தம் 11,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.60 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.17 ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.90% ஆகும். இது கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55 சதவீதம் பெற்ற நிலையில் இந்தாண்டு 93.90 சதவீதம் எடுத்து 2.35 சதவீதம் அதிகம். மாநில அளவில் 23 வது இடம் பெற்றுள்ளது. 496 மதிப்பெண்கள் எடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி கொள்ளிடம் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் தவசி மலை 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். சீர்காழி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி உமாபார்வதி என்ற மாணவி 495 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், மேலும் மாவட்ட அளவில் 494 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை 5 பேர் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Read more
7 மாதத்தில் 25 திருமணம்... நகை, பணம், மொபைல் போன்களை கொள்ளையடித்து அட்ராசிட்டி செய்த இளம்பெண்... பரபரப்பு வாக்குமூலம்!
Newspoint
“ரூ.2,00,000 பணத்தைப் பெற்றுக் கொடுத்த ChatGpt”… எப்படி தெரியுமா..? பயனர் போட்ட ஆச்சரிய பதிவு.!!!
Newspoint
தங்க நகை கடன் புதிய வரைவு விதிகளால் யாருக்கு சிக்கல்? 5 கேள்வி - பதில்கள்
Newspoint
“திருமணம் முடிந்த மறுநாளே மணமகனுக்கு அல்வா கொடுத்துவிட்டு”… மைத்துனருடன் ஓடிய மணமகள்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!
Newspoint
திருமண தேதியை அறிவிப்பாரா ரவி மோகன்? அதிரடியாக போட்ட சஸ்பென்ஸ் பதிவு!
Abplive
தஞ்சாவூர் சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
Newspoint
கூட்டணி குறித்து கடலூர் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம்... பிரேமலதா அறிவிப்பு!
Newspoint
துப்பாக்கி குண்டுகளின் வடு இன்னும் மறையவில்லை... கனிமொழி எம்பி!
Newspoint
அதிமுகவை விமர்சிக்கும் பாஜகவினர் மீது நடவடிக்கை?…. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை…!!!
Newspoint
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா?… சிரித்தபடி பதிலளித்த புதுச்சேரி முதல்வர்…!!!
Newspoint