மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கோசல்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நட்பின் பெயரில் 15 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில், சிறுமியின் மைத்துனரும், அவரது மனைவியின் சகோதரரும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி சமீபத்தில் பள்ளி விடுமுறை காரணமாக தனது அத்தையின் கிராமமான சிஹோரா செல்லும்போது, அங்கு வசித்து வந்த ஹிருத்திக் படேல் என்ற இளைஞர் அவளுடன் பழகத் தொடங்கினார். பின்னர், ஹிருத்திக், சிறுமியை கோசல்பூரில் உள்ள ஓர் ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் பின், சிறுமியை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி கூறி, ஹிருத்திக் தனது மனைவியின் சகோதரர் அமித் படேலிடம் அனுப்பியுள்ளார். ஆனால், காரில் வைத்து மது அருந்திய நிலையில் அமித் படேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சம்பவத்தை அடுத்த நாளே சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் நிகழ்ந்தவற்றை கூறினார். அதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் கோசல்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். போக்சோ சட்டத்துடன் கூடிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், குற்றம் நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளர் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
Abplive
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Abplive
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Abplive
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
Abplive
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
Abplive
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Abplive
கோவையில் மருத்துவ பணியில் இருந்தபோது மாணவி மரணம் - சந்தேகம் எழுப்பும் குடும்பத்தினர்
Newspoint
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Abplive
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
Abplive
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..! டிக்கெட் ரத்து கட்டணம் குறைய போகுதாம்..!
Newspoint