இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
கமல் - மணிரத்னம் காம்போவில் சுமார் 38 வருடங்களுக்கு பின்னர், கடந்த ஜூன் 5-ஆம் தேதி தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆனதால், பெரும்பாலான ரசிகர்கள் 'தக் லைஃப்' திரைப்படம் நாயகன் 2 படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என நினைத்தார். இதற்க்கு முக்கிய காரணம், இதுவும் ஒரு கேங் ஸ்டார் கதை என்பதே. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாப்போல் இப்படத்தில் கமல், நாயகன் பட லுக்கில் தோன்றி இருந்தார். ஆனால் படத்தை முழுமையாக பார்த்த பின்னர் ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.
ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் ரசிகர்களை ஏமாற்றிய கமல், இந்த படத்திலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் கலவையான விமர்சனங்களை தாண்டி பல்வேறு ட்ரோல்களுக்கு ஆளாகி வருவது தான் அதிர்ச்சியின் உச்சம். 'சிந்து சமவெளி' படத்தோடு ஒப்பிட்டு சிலர் 'தக் லைஃப்' படத்தை வெளுத்தி வாங்கி வருகிறார்கள். சோசியல் மீடியாவில் வலம் வரும் விமர்சனங்கள் காரணமாக த்ரிஷாவும் கடும் மன உளைச்சலில் உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக தன்னுடைய படங்கள் வெளியாகும் போது, தோழிகள் அல்லது படக்குழுவினருடன் வந்து படம் பார்க்கும் த்ரிஷா, இந்த முறை வெளியே தலைகாட்ட முடியாமல் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'தக் லைஃப்' திரைப்படம் முதல் நாளில் மட்டுமே உலக அளவில் ரூ.46 கோடி அதிக பட்சமாக வசூல் செய்தது. இதை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் இடையே இருந்தும் கூட.... தற்போது வரை 4 நாட்களில் 75 கோடியை கூட படத்தின் வசூல் எட்டவில்லை.
தக் லைஃப் படத்தில் வசூல் நிலவரம் குறித்து வெளியாகியுள்ள தகவலில், இப்படம் முதல் நாளில் - ரூ. 46 கோடியும், இரண்டாம் நாளில் - ரூ. 6 கோடியும், மூன்றாம் நாளில் - ரூ. 15 கோடியும், நான்காம் நாளில் - ரூ. 7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம். மொத்தத்தில் இதுவரை உலக அளவில் ரூ. 74 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் விமர்சனங்கள் காரணமாக இனிமேல் வசூல் ரீதியாக தக் லைஃப் தேறுவது மிகவும் கஷ்டம் என கூறப்படுகிறது. அதே நேரம் கண்டிப்பாக ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.