பாமக நிர்வாகி சக்கரவர்த்தி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து  அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்  “வழக்கறிஞர் சக்கரவர்த்தி கொலையினை நீண்ட நெடிய புலன் விசாரணைக்கு உட்படுத்தி உண்மை நிலையை கொண்டு வந்து குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த வேண்டும். வழக்கறிஞர் சக்கரவர்த்தியின் கொலை என்பது சர்வதேச குற்றவாளிகள் நடத்திய கொலை போல் காட்சியளிக்கிறது. 


இந்தக் கொலை என்பது உலகத்தரத்தில் உருவாகும் ஆங்கில திரைப்படங்களில் வரும் கொலைக்காட்சி போல் தென்படுகிறது. எனவே இந்த கொலை ஏன் நடந்தது, எப்படி நடந்தது, எதற்காக நடந்தது, இதில் உள்ளடங்கி உள்ள மர்மம் என்ன என்பதை காவல்துறையினர் அனைத்து கட்ட விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து விரைவாக குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். நவீன கொலையாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்.

கொலையுண்டு போன வழக்கறிஞர் சக்கரவர்த்தி ராணிப்பேட்டை மாவட்டத்தின் இளைஞர் பிரிவின் செயலாளராக அறியப்படுகிறார்.  அவர் இந்த இயக்கத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர். அவருடைய இழப்பு நமது கட்சிக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது கொலைக்கு காரணமானவர்கள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Read more
மூன்று இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகள்.. எதிர்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!
Newspoint
அமெரிக்கா போகணும்! அனுமதினி கொடுங்க - நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜி சகோதரர்!
Newspoint
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு – நீதிமன்றம் நிபுணர் குழு நேரத்தையே ஏற்றுக்கொண்டது!
Newspoint
“10 ஆண்டுகளாக தூங்கினீர்கள்! ஈபிஎஸ்-ஐ அதிமுக தொண்டர்கள் மன்னிக்கமாட்டார்கள்”- டிஆர்பி ராஜா
Newspoint
போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை தரலாமா? பைக் விபத்தால் காயமடைந்த தம்பதி.. காப்பாற்ற உதவுவது போல் தங்கச்சங்கிலியை திருடிய மர்மநபர்கள்..!
Newspoint
உங்கள் பிள்ளை இன்னும் குழந்தையாகவே தந்தையாகியிருக்கிறேன்! - மகனின் வலி | #உறவின்கடிதம்
Newspoint
கத்தியுடன் சுற்றியவர் மாற்றுக்கட்சிக்காரர்- தவெக விளக்கம்
Newspoint
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு.!
Newspoint
வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயற்சி
Newspoint
தந்தை சரியில்லா பிள்ளையாகிவிட்டேனே! - மகளின் வலி | #உறவின்கடிதம்
Newspoint