தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழையும்,  தேனி, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை  மாவட்டங்களில்  கனமழையும் பெய்து வருகிறது. கேரளாவிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும்  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,  நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  

மேலும் தமிழகத்தில் காலை 10 மணிக்குள்ளாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  அதன்படி, நீலகிரி , கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.  

Read more
தமிழ்நாட்டில் ஜவுளிப் பூங்கா? எப்போது வருகிறது?
Abplive
ஆடிப்பூர நிறைவு; ஆண்டாள் சந்நிதியில் புஷ்ப யாகம்!
Newspoint
ஆயுத பூஜை விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? இன்றே ரயில் முன்பதிவுக்கு திட்டமிடுங்க!
Newspoint
இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:
Newspoint
இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!
Newspoint
சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!
Newspoint
இந்த நகரத்தில் ”இறப்பதே சட்டவிரோதம்” - வினோத விதிக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?
Newspoint
தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றி வருகிறது மத்திய பாஜக அரசு: ஐ என் டியு சி தலைவர் குற்றச்சாட்டு!
Newspoint
ஓடிக்கொண்டிருந்த ரயில்….!! ரயில்வே கேட்டை தாண்டி போதையில் தள்ளாடியபடி சென்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்…. அடுத்து என்னாச்சு தெரியுமா…? பரபரப்பு வீடியோ…!!
Newspoint
அமெரிக்கா: இந்தியாவிற்கு 25%; பாகிஸ்தான், இஸ்ரேல், ஈராக், கனடா, சிரியா.. வரி எவ்வளவு; அமல் எப்போது?
Newspoint