பிஜே மருத்துவக் கல்லூரி அருகே நிகழ்ந்த விமான விபத்து நாட்டை உலுக்கியுள்ளது. சம்பவம் நடந்ததும், 56 வயதான கட்டுமான தொழிலதிபர் ராஜு படேல், எந்த தயக்கமும் இன்றி தனது குழுவுடன் ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்தார். தீப்பிழம்புகள் எழுந்து, புகையால் மூடிய அந்தப் பகுதியில், அவர் செய்த மனிதாபிமானச் செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளன.

ராஜு படேல் கூறியதாவது: “முதல் 15 முதல் 20 நிமிடங்கள் நாங்கள் அருகில் செல்ல முடியவில்லை. தீ பளபளவென்று எரிந்தது. முதல் தீயணைப்பு வீரர்கள் வந்ததும், 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்ததும், நாங்கள் காயமடைந்தவர்களை சேலைகள், படுக்கை விரிப்புகள் கொண்டு தூக்கிச் சென்றோம். ஸ்ட்ரெச்சர்கள் எதுவும் அந்த நேரத்தில் இல்லை.

மாலை 4 மணிக்கு மீட்பு பணி சற்று குறைந்த நிலையில், சிதறிய பைகள், பெட்டிகளை தேடி 700 கிராம் தங்க நகைகள், ரூ.80,000 ரொக்கம், பாஸ்போர்ட், பகவத்கீதை புத்தகம் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இவை அனைத்தையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக ராஜு படேல் தெரிவித்தார். அதிகாரிகள் இரவு 9 மணி வரை அவர்களை உதவ அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, மரணமடைந்தவர்களின் உறவினர்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதியளித்தார்.

Read more
Viral Video:இடிந்து விழுந்த தாங்கு சுவர்! நூலிழையில் தப்பிய பயணிகள் ரயில்.. திக் திக் வீடியோ
Abplive
EPS On BJP: விஜய் வரணும்.. குஷிப்படுத்த பாஜககாரங்க பேசிக்கிறாங்க, அதிமுகவில் சீமான்? - எடப்பாடி பேச்சு
Abplive
Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
Abplive
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
Abplive
Ponmudi vs Lakshmanan : CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
Abplive
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
Abplive
சுயசார்பு இந்தியாவிற்கான தேசி திட்டம்: கிராமப்புற வளர்ச்சிக்கு சக்தி அளிக்கும் உள்நாட்டு வணிக மாதிரி
Abplive
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
Abplive
விஜய்க்கு செல்வாக்கு இருக்கா? இல்லையா? மகன் மிதுன் கொடுத்த ரிப்போர்ட்- ஈபிஎஸ் கணக்கு இதுதான்!
Abplive
அடி தூள்... இந்த பள்ளிக் கல்வி ஊழியர்களுக்கெல்லாம் ஊதிய உயர்வு- பட்டியல் போட்ட அரசு!
Abplive