திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து 533 மனுக்களை பெற்றுக் கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது  குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும்  533   மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 86 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 98 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 76 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 45  மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 228  மனுக்களும் என மொத்தம் 533 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.3.11.400 மதிப்பீட்டில் நவீன செயற்கை அவையங்களும் , All the Children Integrated Children Home தொண்டு நிறுவனம் மூலம் வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் 24 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள், அக்குல் கட்டை, எல்போ ஊன்றுகோல்,  நடை உபகரணங்கள் ஆகியவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், உதவி ஆணையர் கலால் கணேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் பாலமுருகன் (திருவள்ளூர்), கனிமொழி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் உஷா ராணி , மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more
TVK Vijay: விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? டெல்லியில் சோனியா, ராகுல் ஆலோசனை - ஷாக்கில் திமுக
Abplive
எந்த நேரத்தில் என்ன நடக்கும்னே தெரியாது..! நெல்லையில் ஜாதி கொலை, திருப்புவனத்தில் சட்ட கொலை: சட்டம் ஒழுங்கு, கட்டுப்பாடு எங்கு இருக்கிறது..? சீமான் காட்டம்..!
Newspoint
“பெண்கள், சிறுமிகளை மரத்தில் கட்டி வைத்த வாலிபர்…” முடியை பிடித்து இழுத்து, குச்சியால் அடித்து அரங்கேறிய கொடூரம்…. பேய் விரட்டுவதாக கூறி அட்டூழியம்…. பகீர் பின்னணி…!!
Newspoint
முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய ராமதாஸ்: `தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை' - என்ன பேசினார்?
Newspoint
தமிழக மக்களே..! மீண்டும் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை… இன்று கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?
Newspoint
கடைசி நொடி வரை நண்பர்களுடன்….! “300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு…” செல்பி எடுக்க முயன்று கீழே விழுந்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ….!!
Newspoint
`6.5 கோடி வாக்காளர் + 2 கோடி வடவர்; அகதியாகும் தமிழர்கள்' - தேர்தல் ஆணயத்துக்கு சீமான் கண்டனம்
Newspoint
உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Newspoint
நான் என்ன பேசணும்? நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு பிரதமர் மோடி.. வெளியான அறிவிப்பு!
Newspoint
National Award: ”எங்களுக்காக படம் எடுங்க, தேசிய விருது கன்ஃபார்ம்” அள்ளிக் கொடுத்த பாஜக - படம் பார்த்தீங்களா?
Abplive