TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

தேர்வர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க டிஎன்பிசி தேர்வாணையம் கால அவகாசம் வழங்கியது. அதன்படி, ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்   வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.

TNPSC குரூப் 4 தேர்வு ஹால்டிகேட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்:

  1. tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  2. முகப்புப் பக்கத்தில், தேர்வு டேஷ்போர்டிற்குச் சென்று, பின்னர் குரூப் IV சேவைகளுக்குச் செல்லவும்.
  3. அடுத்த பக்கத்தில், OTR டாஷ்போர்டுக்குச் செல்லவும்.
  4. உள்நுழைய உங்கள் சான்றுகளை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
  5. இப்போது திரையில் உங்கள் சுயவிவர பக்கத்தில், ஹால் டிக்கெட் என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  6. இப்போது திரையில் தோன்றும் TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) 2025 என்பதற்கு நேராக டவுன்லோட் ஹால் டிக்கெட் என்று இருக்கும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  7. இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிக் கொண்டு உள்நுழைய வேண்டும்.
  8. இப்போது திரையில் குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
Read more
அவர் ஒரு விஜயகாந்த்.. பிக்பாஸில் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி.. பாண்டிராஜ் நெகிழ்ச்சி
Abplive
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
Abplive
விக் இல்லாமல் வந்த பிரபாஸ்...இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
Abplive
மடப்புரம் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான சி.பி.ஐ., விசாரணைக்கு அஜித்குமார் சகோதரர் உட்பட 5 பேர் ஆஜர் !
Abplive
கலா 40க்கு பதிலா கலா ஸ்வீட்டி வைத்திருக்கலாம்.. எனக்கு Dress எடுத்து கொடுத்தாங்க.. KPY பாலா எமோஷனல்
Abplive
“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
Abplive
பள்ளிகளில் ப வடிவ இருக்கை கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
Abplive
"தந்தை அடையாளத்தில் நான் வரவில்லை" மு.க.ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி.
Abplive
பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்.. சினிமாவில் பகுத்தறிவு.. வாழ்நாள் முழுக்க சர்ச்சை
Abplive
கூட்டணி ஆட்சி-இபிஎஸ் பதில், வந்தே பாரத் முன்பதிவில் புதிய வசதி, ட்ரம்ப்பிற்கு வந்த நோய் - 11 மணி செய்திகள்
Abplive