உத்தரபிரதேச மாநில அளவிலான கபடி வீரர் 22 வயதே ஆன பிரிஜேஷ் சோலங்கி சமீபத்தில் ரேபிஸ் (Rabies) நோயால் உயிரிழந்தார். அதேபோல், கேரளாவிலும் சமீபத்தில் ரேபிஸ் நோயால் 2 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் கடுமையான ஆலோசனைகளை வழங்கியது. நாய் கடி (Dog Bite) வகையை அடையாளம் காணவும், ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) மற்றும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி (ARV) உள்ளிட்ட போஸ்ட்-எக்ஸ்போஷர் ப்ரோபிலாக்ஸிஸ் (PEP) ஆகியவற்றை சரியான நேரத்தில் மற்றும் சரியாக அடையாளம் காணவும் உடனடி பயிற்சி தேவை என்பதை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ரேபிஸ் தொற்று என்றால் என்ன..?ரேபிஸ் என்பது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு கொடிய வைரஸ் நோயாகும். இதன் அறிகுறிகள் தோன்றிய பிறகு உயிர்வாழும் வாய்ப்பு மிக குறைவுதான். ரேபிஸ் நோய் கண்டறியப்பட்டவுடன் தடுப்பூசி சரியாகவும், விரைவாகவும் வழங்கப்பட்டால் மட்டுமே உயிர்களை காப்பாற்ற முடியும். இது மூளையின் அடுக்குகளைப் பாதிக்கிறது, இதன் காரணமாக சில சூழ்நிலைகளில் நபர் மிகவும் விசித்திரமாக நடந்து கொள்ளத் தொடங்குகிறார், அதாவது தீவிர உடல் பிடிப்புகள் அல்லது குழப்பம் போன்றவை ஏற்படும். ரேபிஸின் ஆரம்ப அறிகுறிகள் காய்ச்சலின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். இது பல நாட்களுக்கு பிறகு குழப்பம், அதிவேகத்தன்மை, விழுங்குவதில் சிரமம், அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, தூக்கமின்மை மற்றும் பகுதி பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ரேபிஸ் நோயால் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரு மதிப்பீட்டின்படி, ரேபிஸால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 59,000 பேர் இறக்கின்றனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட விலங்குகள் கடித்த பிறகு தடுப்பூசி மற்றும் சிகிச்சை மூலம் ரேபிஸைத் தடுக்கலாம். இந்தியாவில் வெறிநாய்க்கடி நோயைத் தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், ஒவ்வொரு ஆண்டும் 5,700 பேர் வெறிநாய்க்கடி நோயால் இறக்கின்றனர்.
ரேபிஸ் நோய் எப்படி பரவுகிறது..?ரேபிஸ் என்பது பாதிக்கப்பட்ட உமிழ்நீர் மூலம் மக்களுக்கு பரவுகிறது. ரேபிஸ் வைரஸ் பொதுவாக நாய்கள், பூனைகள் மற்றும் குரங்குகள் கடிப்பதன் மூலம் பரவுகிறது. இது தவிர, அதன் தொற்று வௌவால்கள், நரிகள் மற்றும் ரக்கூன்கள் மூலமாகவும் பரவலாம்.
தடுக்க என்ன செய்யலாம்..?