விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து ராஜு, அடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளராக மாறினார். அதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து வந்த இவர் பன் பட்டர் ஜாம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் ராஜூ, பாக்கியராஜ் சாருக்கும், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் சாருக்கும் முதலின் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும், அதில் என்னை ஜெயிக்க வைத்த மக்களும் தான் காரணம். படத்தில் மட்டும் தான் நடிப்பேன். இதுபோன்ற மேடைகளில் நடிக்க மாட்டேன் என்பதை இப்போது சொல்லிக்கொள்கிறேன். இந்த நேரத்தில் உதவி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நானும் ஒரு உதவி இயக்குநராக இருந்ததால் அவர்களை கெளரவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இந்த படத்தில் நான் மட்டும் ஹீரோ கிடையாது. மைக்கேல். விஜே பப்பு என 3 பேருடைய ஹீரோக்களின் கதை. நான் அம்மா சொல்லி திருந்திய பையன் கிடையாது. சினிமாவை பார்த்து என்னை மாற்றிக்கொண்டேன். நான் சமூக பொறுப்புணர்வோடு இருப்பதற்கு காரணம் சினிமாதான். அந்த மாதிரி ஒரு மெசேஜை சுகர்கோட் செய்து எங்க டைரக்டர் ராகவ் மிர்தாத் கொடுத்துள்ளார். கண்டிப்பா உங்க காசு வேஸ்ட் ஆகாது என ராஜு தெரிவித்தார்.
பன் பட்டர் ஜாம் படத்தில் குட்டி நயன்தாரா, அதிதி ராவ் நடிச்சிருக்காங்க. இந்த படத்தின் மூலம் ரெண்டு பேரும் இதைவிட மிகப்பெரிய இடத்தை தொட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதேபோன்று எல்லோரும் தயாரிப்பாளரிடம் கதை சொல்ல கஷ்டப்படுவார்கள். இந்த கதையே தயாரிப்பாளருடயது என்பதால் அந்த கவலை கொஞ்சம் நீங்கியது. படம் பார்க்கும் சரண்யா மேடம், சார்லி சார் ஆகியோருடைய நடிப்பை கண்டிப்பாக பாராட்டுவீர்கள் என ராஜூ தெரிவித்தார்.
பன் பட்டர் ஜாம் எல்லா ஊர்களிலும், கிராமங்களிலும் கிடைப்பது போல இப்படமும் மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். முக்கியமாக தளபதி விஜய் அண்ணா ஒரே போன்காலில் மொத்த தமிழ்நாட்டையும் எங்க படத்தை திரும்பிப்பார்க்க வைத்து விட்டார். படத்தின் டீசரை பார்த்து விட்டு வேற லெவல் பா. படத்தை தியேட்டரில் பார்க்க ஆர்வமாக இருப்பதாகக் கூறி பாராட்டினார். அவர் என்னை எப்படிப் பார்க்கிறார், அவருக்கு என்னைப் பிடிக்குமா, எதுக்காக எனக்கு வாழ்தது சொல்கிறார் என்பது பிரமிப்பா இருக்கு. நீங்கள் இல்லைன்னா என்ன பண்ணியிருப்போம் தெரியலனா. உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். லவ் யூ என கூறியுள்ளார்.