90களில் கவர்ச்சி நடிகையாகவும், காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தவர் விசித்ரா. இவர், தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நடிக்க வந்து இந்த வேடம் தான் கிடைத்தது என பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். போர்க்கொடி படத்தில் அறிமுகம் ஆன இவர், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியது பலரையும் கண் கலங்க வைத்திருக்கிறது.
ரசிகன் படத்தில் விஜயுடன் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார் விசித்ரா. அதில் விஜயிடம் கவர்ச்சி காட்டி நடிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இதுகுறித்து அண்மையில் பேசிய அவர், ரசிகன் படத்தில் விஜயிடம் நார்மலா பேச சொன்னாலே நல்லா நடிப்பேன். குழந்தை மாதிரி கொஞ்சி பேசணும் சொல்லும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. அந்த காட்சியை ரீ கிரியேட் செய்தும் நடித்து காண்பித்து அசத்தினார். இதுபோன்று பல படங்கள் பிடிக்காமல் நடிக்க இருந்ததையும் மனம் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
தெலுங்கில் ஒரு படத்தில் நடித்த போது பிரபலமான நடிகர் ஒருவர் என்னிடம் பாலியல் ரீதியாக சீண்டினார். அவர் என்னை ரொம்ப டார்ச்சர் செய்தார். இந்த ஒரு காரணத்தினாலேயே நான் சினிமாவை விட்டு விலக காரணமாக இருந்தது என அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டார் விசித்ரா. அந்த நடிகர் பாலையா தான் என கிசுகிசுக்கப்பட்டது. தெலுங்கில் அவர் தான் டாப் ஹீரோ என்றும் பேச தொடங்கினர். அப்போது நான் இதை சொல்லி இருந்தால் என் கரியரே காலி ஆகியிருக்கும். இப்போது சொல்ல முடிகிறது எனவும் விசித்ரா தெரிவித்தார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய விசித்ரா குடும்பம், பசங்க என்று மலேசியாவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனதை வென்றார். படங்களில் பார்த்த விசித்ராவிற்கும், குக் வித் கோமாளியில் இருந்த விசித்ராவிற்கும் உள்ள உண்மையான குணத்தை மக்கள் விரும்ப தொடங்கினார்கள். விசித்ராவிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில், நடிகை விசித்ராவை கெளரவிக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அப்போது திருமணம் குறித்து பேசி கண் கலங்கினார்.
90களில் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எனக்கு திருமணம் நடக்குமா?, நல்ல கணவர் அமைவாரா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். ஒரு நேரத்தில் திருமணமே வேண்டாம், சிங்கிளாகவே இருந்துவிடலாம் என்று கூட முடிவெடுத்திருந்தேன். அப்போது ஷாஜி திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். நான் ரொம்ப யோசித்தேன். பிறகு அவரை திருமணம் செய்துகொண்டேன். ஆனால், திருமணத்திற்கு பிறகு என் வாழ்க்கை சவாலாக மாறியது. எனக்கு திருமணம் முடிந்து 3 பிள்ளைகள் உள்ளனர். பல வருடங்கள் கழித்து இப்போது திருமணம் பற்றி யோசிக்கும் போது ரொம்ப எமோஷனலாக இருக்கிறது" எனக் கூறி கண் கலங்கினார்.