விஜய், சூர்யா, அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் அனுஷ்கா. இவர் தெலுங்கில் அருந்ததி, பாகுபலி, போன்ற படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாகவும் வலம் வந்துள்ளார். தற்போது நல்ல திரைக்கதை கொண்ட படங்களில் நடித்து இவர் விக்ரம் பிரபுவுடன் காட்டி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படம் ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
டாப் ஹீரோக்களின் படங்களில் ஹீராேயினாக நடித்து வந்தாலும், அவ்வப்போது ருத்ரம்மா தேவி, அருந்ததி, பாகமதி, நிசப்தம் போன்ற படங்களில் அழுத்தமான கதாப்பாத்திரங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள காட்டி திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், ஒரு சில காரணத்தால் தற்போது படம் ஜூலை 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், மீண்டும் படக்குழுவினர் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளது. படத்தின் தரத்தை மேம்படுத்த காலவரையரை இன்று ஒத்திவைக்கப்படுவதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள
அனுஷ்கா குறித்த செய்திகள் வெளியாகும் நேரத்தில் பலரிடம் இருந்து வரும் கேள்வி எப்போது திருமணம்
என்பது தான். 43 வயதாகும் அவருக்கு திருமணத்தை பற்றிய கிசுகிசுக்களும் வரத்தொடங்கின. பாகுபலி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது பிரபாஸூம், அனுஷ்காவும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதற்கு நடிகை அனுஷ்கா மறுப்பு தெரிவித்தார். நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் எனக் கூறி அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், அனுஷ்கா தனது காதலனை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
காதல் குறித்து பேசிய அனுஷ்கா பள்ளியில் நடந்ததை பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில், நான் ஆறாம் வகுப்பு படித்த போது, ஒரு பையன் என்னிடம் வந்து நான் உன்னை காதலிக்கிறேன் என தெரிவித்தான். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உயிருக்கு உயிராக நேசிப்பதாக தெரிவித்தான். அந்த வயதில் அது சரியா தவறா என்பது கூட புரியவில்லை. நானும் சரி என்று அந்த காதலை ஏற்றுக்கொண்டேன். ஆனால், அந்த நினைவுகள் எப்போதும் இனிமை தான். வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.