அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள்இன்று பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிஐடியு (CITU) உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால், மாநிலத்திலேயே பேருந்து சேவைகள் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தும் அரசு பேருந்துகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் போக்குவரத்து சேவைகள் இந்த வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை சார்பில் கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அனைவரும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) பணிக்கு வந்த ஊழியர்கள், புதன்கிழமை (ஜூலை 9) விடுப்பு பெற முடியாது என்றும், அதற்குப் பதிலாக வியாழக்கிழமை (ஜூலை 10) விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனவும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதனுடன், வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக தேசியமயமாக்கப்பட்ட கூட்டுறவு வணிக வங்கிகளின் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக தமிழகத்தில் 25,000 முதல் 30,000 வரை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர். இதனால், வரைவோலை, காசோலை மாற்றுதல், பணப்பரிவர்த்தனை போன்ற முக்கிய வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதனால், நாளை பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வங்கி சேவைகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

Read more
இனி, விவசாயிகளுக்கு எளிதில் கடன் கிடைக்கும்.. 100 மாவட்டங்களில் சூப்பர் திட்டம்!
Abplive
இரக்கமில்லையா? ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தை! !பெற்றோர் செய்த கொடூரம்!
Abplive
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Abplive
இளைஞர்களே! காலணித் தொழிற்சாலைகளில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிங்க!
Abplive
சோகத்திலும் சோகம்; காசாவில் நிவாரண விநியோகத்தின்போது நெரிசலில் 19 பேர் பலி - என்ன கொடுமை இது.?!
Abplive
Divyadharshini : இப்படிப்பட்ட கணவரைத் தான் பிடிக்கும்.. அவன்தான் ஆண்மகன்.. மனம் திறந்த டிடி
Abplive
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
Abplive
கூட்டணிக்கு அழைத்த ஈபிஎஸ்; ‘’ஆட்சியில் பங்கு வேண்டும்’’- செக் வைத்த அன்புமணி!
Abplive
’’கூட்டணி ஆட்சியா? இங்க நான் எடுக்கறதுதான் இறுதி முடிவு’’- மீசையை முறுக்கிய ஈபிஎஸ்!
Abplive
திருமண நாளில் முக்கிய அறிவிப்பு.. விஜய் எடுத்த அதிரடி முடிவு.. அடுத்து என்ன நடக்குமோ?
Abplive