சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 98 ஆவது திரைப்படம் மாரீசன். மாமன்னன் படத்திற்கு பின் வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் கூட்ட்ணி இரண்டாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளது. வி கிருஷ்ணமூர்த்தி கதை திரைக்கதை வசனம் எழுதி சுதீஷ் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஜூலை 25 ஆம் தேதி மாரீசன் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் நேற்று ஜூலை 10 ஆம் தேதி வெளியானது .
மாரீசன் படத்தின் கதையை அப்படத்தின் இயக்குநர் சுதீஷ் சங்கர் கூறியுள்ளார். " அல்ஸைமர் என்கிற நியாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் வடிவேலும். ஃபகத் ஃபாசில் ஒரு திருடனாக நடித்துள்ளார். வடிவேலுவிடம் நிறைய பணமிருப்பதை தெரிந்துகொள்ளும் ஃபகத் ஃபாசில் அவரிடம் இருந்து அந்த பணத்தை திருட திட்டமிடுகிறார். நாகர்கோயிலில் இருந்து திருவண்ணாமலை செல்லவிருக்கும் வடிவேலுவை தான் பைக்கில் டிராப் செய்வதாக ஃபகத் ஃபாசில் சொல்கிறார். ஃபகத் ஃபாசில் வடிவேலுவிடம் இருந்து பணத்தை திருடினாரா என்பதே மாரீசன் படத்தின் கதை"
Vadivelu is a Rich Man, an Alzheimer Patient. FaFa notice his money once Vadivel was using the ATM. He convince him to drop him at Thiruvannamalai from Nagercoil on Fafa Bike. This journey is the movie. Whether FaFa gets the money from Vadivelu or not?#Maareesan | Dir Sudeesh. pic.twitter.com/KAsZ00zD63
— Christopher Kanagaraj (@Chrissuccess) July 11, 2025
மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் வடிவேலு ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்தார்கள். காமெடியனாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த வடிவேலு இப்படத்தில் முழுக்க முழுக்க சீரியஸான ரோலில் நடித்திருந்தார். அவருக்கு எதிராக கொடூரமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார். மாமன்னன் படத்திற்கு நேரெதிராக முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது மாரீசன் திரைப்படனம். மீண்டும் ஒருமுறை இந்த கூட்டணி மக்களை கவருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்