மாரீசன் 

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 98 ஆவது திரைப்படம் மாரீசன். மாமன்னன் படத்திற்கு பின் வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் கூட்ட்ணி இரண்டாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளது. வி கிருஷ்ணமூர்த்தி கதை திரைக்கதை வசனம் எழுதி சுதீஷ் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஜூலை 25 ஆம் தேதி மாரீசன் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் நேற்று ஜூலை 10 ஆம் தேதி வெளியானது .

மாரீசன் படத்தின் கதை 

மாரீசன் படத்தின் கதையை அப்படத்தின் இயக்குநர் சுதீஷ் சங்கர் கூறியுள்ளார். " அல்ஸைமர் என்கிற நியாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் வடிவேலும். ஃபகத் ஃபாசில் ஒரு திருடனாக நடித்துள்ளார். வடிவேலுவிடம் நிறைய பணமிருப்பதை தெரிந்துகொள்ளும் ஃபகத் ஃபாசில் அவரிடம் இருந்து அந்த பணத்தை திருட திட்டமிடுகிறார்.  நாகர்கோயிலில் இருந்து திருவண்ணாமலை செல்லவிருக்கும் வடிவேலுவை தான் பைக்கில் டிராப் செய்வதாக ஃபகத் ஃபாசில் சொல்கிறார். ஃபகத் ஃபாசில் வடிவேலுவிடம் இருந்து பணத்தை திருடினாரா என்பதே மாரீசன் படத்தின் கதை" 

மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் வடிவேலு ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்தார்கள். காமெடியனாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த வடிவேலு இப்படத்தில் முழுக்க முழுக்க சீரியஸான ரோலில் நடித்திருந்தார். அவருக்கு எதிராக கொடூரமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார். மாமன்னன் படத்திற்கு நேரெதிராக முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது மாரீசன் திரைப்படனம். மீண்டும் ஒருமுறை இந்த கூட்டணி மக்களை கவருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 

Read more
''பொறுப்பற்ற தன்மையில் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் ராகுல் தான்:'' நிர்மலா சீதாராமன் விமர்சனம்..!
Newspoint
உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்: ''பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு'' என முதல்வர் பெருமிதம்..!
Newspoint
நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக் குறைவால் காலமானார்..!
Newspoint
தவெக நிகழ்ச்சிகளில் புகைப்படம் பயன்படுத்த தடை... பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவு!
Newspoint
ராமஜெயம் கொலை வழக்கு.... மத்திய சிறையில் கைதியிடம் டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை!
Newspoint
காசாவில் கொடூரம்... உதவிக்காக காத்திருந்த 1,373 பொதுமக்கள் படுகொலை... ஐநா அதிர்ச்சி தகவல்!
Newspoint
வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்ல... எப்படி தேர்தலில் போட்டியிடுவேன்... முன்னாள் துணை முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு!
Newspoint
SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?
Newspoint
சென்னை: பார்வையாளர்களை கவர்ந்த SRMPR Auto Tec அரங்கம்
Newspoint
பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்கள் - போக்குவரத்து போலீசார் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை.!!
Newspoint