DNA ஓடிடி ரிலீஸ்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் டி.என்.ஏ. பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா கேபி, சுப்ரமணியன் சிவா, கருணாகரன், பசங்க சிவகுமார் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ள நிலையில்ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , சத்ய பிரகாஷ் , அனல் ஆகாஷ் , பிரவீன் சைவி , சாஹி சிவா பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்கள். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் அதர்வாவின் கரியரில் வெற்றிப்படமாக அமைந்தது டி.என்.ஏ. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியயதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் தோல்விகளால் தவித்த அதர்வா

நடிகர் முரளியின் மகனான அதர்வா பானாகாத்தாடி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தனது நடிப்பால் ரசிகர்களிடம் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கினாலும் பெரியளவில் ஹிட் படங்கள் அவருக்கு அமையவில்லை. பாலா இயக்கிய பரதேசி திரைப்படம் அதர்வாவுக்கு இன்றுவரை பெயர் சொல்லும் படமாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் கமர்சியல் வெற்றியை தந்தது. இதனைத் தொடர்ந்து பூமராங் , 100 , குருதி ஆட்டம் என அடுத்தடுத்து வெளியான படங்கள் தோல்வியை தழுவின. இப்படியான நிலையில் பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான டி.என்.ஏ திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. வரும் ஜூலை 19 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் டி.என்.ஏ திரைப்படம் வெளியாக இருக்கிறது. 

பராசக்தி

அடுத்தபடியாக டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இதயம் முரளி மற்றும் பராசக்தி என  இரு படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகிறது இதயம் முரளி. மற்றொரு பக்கம் சுதா கொங்காரா இயக்கும் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனின் சகோதரனாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஶ்ரீலீலா  நாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். 

Read more
ஆடிப்பூர நிறைவு; ஆண்டாள் சந்நிதியில் புஷ்ப யாகம்!
Newspoint
ஆயுத பூஜை விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? இன்றே ரயில் முன்பதிவுக்கு திட்டமிடுங்க!
Newspoint
இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:
Newspoint
இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!
Newspoint
சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!
Newspoint
இந்த நகரத்தில் ”இறப்பதே சட்டவிரோதம்” - வினோத விதிக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?
Newspoint
தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றி வருகிறது மத்திய பாஜக அரசு: ஐ என் டியு சி தலைவர் குற்றச்சாட்டு!
Newspoint
ஓடிக்கொண்டிருந்த ரயில்….!! ரயில்வே கேட்டை தாண்டி போதையில் தள்ளாடியபடி சென்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்…. அடுத்து என்னாச்சு தெரியுமா…? பரபரப்பு வீடியோ…!!
Newspoint
அமெரிக்கா: இந்தியாவிற்கு 25%; பாகிஸ்தான், இஸ்ரேல், ஈராக், கனடா, சிரியா.. வரி எவ்வளவு; அமல் எப்போது?
Newspoint
ஹவாய் தீவுகளில் ட்ரோன்கள் மூலம் விடப்படும் கொசுக்கள் - என்ன காரணம் தெரியுமா?
Newspoint