விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். மெகந்தி சர்க்கஸ் படத்தின் கதாநாயகனான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவி உள்ளார் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர்தான் தனது கணவர் என்று ஜாய் என்ற ஆடை வடிவமைப்பாளர் தற்போது புகைப்படத்தை பதிவிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் யார்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
மாதம்பட்டி ரங்கராஜ் கோவையைச் சேர்ந்தவர். சிறுவயது முதலே சமையல் மீது ஆர்வம் கொண்ட இவர் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர், தனது சகோதரருடன் சேர்ந்து தொழில் செய்து வந்த அவர் அதன்பின்பு சமையல் தொழிலில் கொண்ட ஆர்வத்தால் பெங்களூர் சென்று சொந்தமாக உணவகம் தொடங்கினார்.
அதன்பின்பு, மீண்டும் மாதம்பட்டிக்குத் திரும்பிய அவர் அங்கு விழாக்களில் சமையல் பணிகளை மேற்கொண்டார். இவரது சமையலுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு அப்பகுதியில் கிட்டியது. இதையடுத்து, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜையே பலரும் சமையலுக்காக தேர்வு செய்யத் தொடங்கினர். பிரபல நடிகர் கார்த்தியின் திருமணத்திற்கும் சமையல் இவரே ஆகும். 2013ம் ஆண்டு மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டியைத் தொடங்கினார்.
தொடர்ந்து புகழ்பெற்று வந்த மாதம்பட்டி ரங்கராஜுற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2019ம் ஆண்டு மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் பெரியளவு வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாதம்பட்டி ரங்கராஜுன் நடிப்பும் பாராட்டைப் பெற்றது.
இதையடுத்தே, அவருக்கு குக் வித் கோமாளியில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்று பிரபலமான இவர், 6வது சீசனில் மிகவும் பிரபலமானார். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது தனது மனைவியை விவாகரத்து செய்யாமலே இரண்டாவதாக ஜாய் என்ற பெண்ணை திருமணம் செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது திருமணம் செய்துள்ளதாக கூறப்படும் அந்த பெண் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.