இன்றைய வேகமான வாழ்க்கைமுறையிலும், வேலைப் பணி, சமூக அழுத்தங்கள் மற்றும் மன அழுத்தங்களிலும் சிக்கிய இளம் தம்பதிகள், குடும்ப வாழ்க்கையில் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதில் தவறி, திருமண வாழ்க்கையை முடிக்க தயாராகிவரும் பிரச்னை பெருகி வருவதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக 30 வயதிற்கும் குறைவானவர் மத்தியில், விவாகரத்து தேர்வாக மாறிவிட்டது. சின்னச்சின்ன தகராறுகளுக்கே விட்டு கொடுக்காமல், கோபம், அகங்காரம், புரிதல் இன்மை ஆகிய காரணங்களால், சில மாதங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலத்தில் திருமணத்திற்கு உடனடியாகவோ, சில மாதங்களுக்குள்ளாகவோ விவாகரத்து கோரும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆண்டுக்கு சுமார் 1.10 லட்சம் திருமணங்கள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படுகின்றன. அதே நேரத்தில், சுமார் 30,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவாகுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க அளவுக்கு, முந்தைய ஆண்டில் திருமணம் செய்த தம்பதிகளே, அடுத்த ஆண்டு விவாகரத்திற்கான மனுவை தாக்கல் செய்கின்றனர் என்பது ஆச்சரியமான தகவலாகும். இந்த விபரங்கள், ஒரு சமூக ஆர்வலரால் தகவலறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெற்றதின் அடிப்படையில் வெளியாகியுள்ளது. மேலும் சமூக ஆர்வலர்கள், குடும்ப நல ஆலோசகர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் கூறும் போது, “புரிதலின்மை, தொடர்பு பற்றாக்குறை, சமூக ஊடகங்களில் மிகுந்த ஈடுபாடு, கோபம் ஆகியவையே இளம் தம்பதிகளில் தற்காலிக மனோநிலை உருவாகுவதற்கு காரணமாகின்றன” என தெரிவித்துள்ளனர்.

 

Read more
'கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு செல்லாத நீங்கள்...' - ஸ்டாலினை விமர்சிக்கும் அண்ணாமலை
Newspoint
4 நாய்கள் கடித்து குதறியதில் பெண்ணின் காது கிழிந்தது! சென்னையில் பயங்கரம்
Newspoint
அரபிக்கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 பேர் பலி; காணாமல் போன 04 பேர்; போலீசார் தேடுதல் வேட்டை..!
Newspoint
புடலங்காயில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்
Newspoint
பெரும் சோகம்..! மின்சார ரயிலில் அடிபட்டு பெண்ணின் கால் துண்டானது..!
Newspoint
மாற்றுத்திறனாளியா இருந்தா என்ன….? இவரோட திறமை எல்லாருக்கும் இருக்குமா….? ரசிக்க வைத்த வீடியோ….!!
Newspoint
பல வருட காதல்!.. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திடீர் நிச்சயதார்த்தம்!.. பின்னணி என்ன?…
Newspoint
Breaking: நடிகர் விஜயின் பிரச்சார வாகனம் பறிமுதல்… வெளியான அதிரடி உத்தரவு…!!
Newspoint
எனக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவருக்கு துணையாக நான் நிற்பேன் - எச். ராஜா..!
Newspoint
ரஜினியை போன்று விஜய்யும் பின்வாங்கி விடுவார் -அடித்து கூறும் எஸ்.வி.சேகர்!
Newspoint