பாமக கட்சியின் இளைஞரணி சங்க தலைவராக சமீபத்தில் ஜிகே மணியின் மகன் தமிழ் குமரனை ராமதாஸ் நியமித்திருந்தார். பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது நிலவுகிறது. தந்தை மற்றும் மகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில் அன்புமணியே ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்.
இந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவராக கணேஷ்குமார் என்பவரை தற்போது அன்புமணி நியமித்துள்ளார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை செஞ்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர். மேலும் இவரை தற்போது இளைஞர் அணி தலைவராக அன்புமணியின் நியமித்து அதற்கான ஆணையையும் அவரிடம் கொடுத்துள்ளார்.