அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன. அமெரிக்க நாட்டு சட்டப்படி நவம்பர் மாதம் பிறந்து முதல் செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் நடைபெறும். 

அதன்படி நவம்பர் 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலுடன், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் (435 உறுப்பினர்கள்) மற்றும் செனட் சபையின் 34 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 13 மாநில மற்றும் பிராந்திய ஆளுநர் பதவிகள் மற்றும் பல மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கின. 

அதிபர் பதவிக்கு ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும் சில வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். நேரடி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தங்கள் செயல் திட்டங்களை வெளியிட்டு காரசாரமக விவாதித்தனர்.

அமெரிக்க சட்டப்படி தேர்தலில் முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியும் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், இ-மெயில் மூலம் நேற்று தனது வாக்கை செலுத்தினார்.

தேர்தல் நாளான இன்று (நவ. 5) காலையில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே வாக்களிக்காத வாக்காளர்கள் இன்று தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். அமெரிக்காவில் மாநிலங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ள நிலையில், வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரம் மாறுபடும். இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடையும்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன், உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கிவிடும். இழுபறி எதுவும் இல்லை என்றால், அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது உடனடியாக தெரியவரும். அதசமயம், அடுத்த அதிபர் யார்? என்பது அநேகமாக நாளையே தெரிந்துவிடும். இறுதி முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. 

Read more
லோகேஷ் கனகராஜ் படத்தில் டெரரான வில்லி.. மெசேஜ் பண்ணேன் ரிப்ளை இல்லை.. டிராகன் பட இயக்குநர் ஓபன் டாக்
Abplive
VP Jagdeep Resign: மூன்றரை மணி நேரத்தில் நடந்தது என்ன? தன்கர் ராஜினாமா, நட்டா & ரிஜிஜு பிளானா? பாஜக ஸ்கெட்ச்?
Abplive
Viral Video:இடிந்து விழுந்த தாங்கு சுவர்! நூலிழையில் தப்பிய பயணிகள் ரயில்.. திக் திக் வீடியோ
Abplive
EPS On BJP: விஜய் வரணும்.. குஷிப்படுத்த பாஜககாரங்க பேசிக்கிறாங்க, அதிமுகவில் சீமான்? - எடப்பாடி பேச்சு
Abplive
Honey Rose: ஹனிரோஸ் ஒரு திருநங்கை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த பயில்வான் ரங்கநாதன்!
Abplive
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
Abplive
Ponmudi vs Lakshmanan : CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
Abplive
வெறும் 18 பேருதானா? 77 வருடத்தில் மக்களவைக்குப் போன இஸ்லாமிய பெண்கள் இவ்வளவுதான்!
Abplive
சுயசார்பு இந்தியாவிற்கான தேசி திட்டம்: கிராமப்புற வளர்ச்சிக்கு சக்தி அளிக்கும் உள்நாட்டு வணிக மாதிரி
Abplive
புதுச்சேரியில் ரூ.1 கோடி மோசடி! போலி முதலீடு வலையில் சிக்கிய மக்கள்: எச்சரிக்கை அவசியம்!
Abplive