சென்னை: அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது என தவெக தலைமை நிலையச் செயலக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதரமற்ற தகவல்களைக் கொண்டு அதிமுகவுடன் தவெக கூட்டணி என்று பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் தலைவர் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

அவரது வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யான செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தலைவரின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more
ஆட்சியில் பங்கு-அன்புமணி அதிரடி, இன்றும் குறைந்த தங்கம் விலை, ட்ரம்ப் சொன்ன நல்ல தகவல் - 11 மணி செய்திகள்
Abplive
குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமியா இது.. உங்களுக்கு என்ன ஆச்சு?.. வீடியோவில் விளக்கம் தந்த நடிகை
Abplive
மயிலாடுதுறையில் முதல்வரின் ரோடு ஷோ நிகழ்வில் டிஎஸ்பிக்கு உதை...! என்ன நடந்தது...?
Abplive
Patanjali: லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த ஆயுர்வேத நிறுவனத்தை நம்புவது ஏன்? - பதஞ்சலி சொன்ன பாயிண்ட்ஸ்
Abplive
கணவர்களுக்கு போதாத காலம் - மனைவி கொடுத்த புகார், அடித்து துன்புறுத்தி பணம் பறித்த போலீஸ்? சோக முடிவு
Abplive
Kiara Advani : பெண் குழந்தைக்கு தாயான கேம் சேஞ்சர் பட நடிகை கியாரா அத்வானி
Abplive
ரஜினி பற்றி பேசி வம்பில் மாட்டிய தவெக ராஜ்மோகன்...மன்னிப்பு கேட்டும் விடாத ரசிகர்கள்..அப்படி என்ன சொன்னார்?
Abplive
விமல் நடித்துள்ள தேசிங்கு ராஜா 2 படம் எப்டி இருக்கு..விமர்சனம் இதோ
Abplive
முதல்வர் ரோடு ஷோவில் விவசாயிகள் தர்ணா போராட்டம் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!
Abplive
25 லட்சம் பட்ஜெட்...சுவாரஸ்யமான கதைசொல்லல்...மாயக்கூத்து திரைப்பட விமர்சனம்
Abplive