நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 300 விசைப்படகுகளில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் இந்த மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு 3 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அந்த பகுதியில் விரைந்து சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்களை அந்த பகுதியில் மீன் பிடிக்க விடாமல் விரட்டியதாக கூறப்படுகிறது. 

இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலில் வீசிய வலைகளை அவசர அவசரமாக வெட்டி எடுத்து கொண்டு கரைக்கு திரும்பினர். 

தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், மீன் பிடிக்க விடாமல் விரட்டியடிப்பதுமாக இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Read more
கலா 40க்கு பதிலா கலா ஸ்வீட்டி வைத்திருக்கலாம்.. எனக்கு Dress எடுத்து கொடுத்தாங்க.. KPY பாலா எமோஷனல்
Abplive
“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
Abplive
பள்ளிகளில் ப வடிவ இருக்கை கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
Abplive
"தந்தை அடையாளத்தில் நான் வரவில்லை" மு.க.ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி.
Abplive
பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்.. சினிமாவில் பகுத்தறிவு.. வாழ்நாள் முழுக்க சர்ச்சை
Abplive
கூட்டணி ஆட்சி-இபிஎஸ் பதில், வந்தே பாரத் முன்பதிவில் புதிய வசதி, ட்ரம்ப்பிற்கு வந்த நோய் - 11 மணி செய்திகள்
Abplive
ரஜினிக்காக அடிதடி சண்டை போட்டிருக்கேன்.. அவரோட வெறியன் நான்.. சரவணன் ஓபன் டாக்
Abplive
INDIA Bloc: பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?
Abplive
அட இது நல்லா இருக்கே.! வந்தே பாரத் ரயில்களின் முன்பதிவில் புதிய வசதி - என்னன்னு தெரிஞ்சுக்கோங்க
Abplive
அகமதாபாத் விமான விபத்திற்கு விமானி காரணமா.? அமெரிக்க பத்திரிகை செய்திக்கு AAIB மறுப்பு
Abplive