2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை வழங்கப்படும் ரூ. 10,000 நிதியுதவி ஆகியவை முக்கிய வாக்குறுதிகளாக இடம்பெற்றுள்ளன.


மேலும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆன்மீக ரீதியாக, முருகப் பெருமானை சிறப்பிக்கும் வகையில் தைப்பூச திருநாளை மாநில விழாவாக அறிவிக்கவும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் பாஜக உறுதி அளித்துள்ளது.


உள்கட்டமைப்பை பொறுத்தவரை, சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடங்கள் மற்றும் முக்கிய நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில்கள் போன்ற திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.


பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்கள் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 50 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படும் என்றும் அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.


Edited by Siva

Contact to : xlf550402@gmail.com


Privacy Agreement

Copyright © boyuanhulian 2020 - 2023. All Right Reserved.