இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், சைபர் மோசடிகளும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இதனை தடுக்கும் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான புதிய வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
2024-25 நிதியாண்டில் வங்கி மோசடிகளின் மதிப்பு சுமார் ரூ. 36,014 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின்படி, ரூ. 29,412-க்கு கீழ் இழப்பு ஏற்படும் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு 85% அதாவதுஅதிகபட்சம் ரூ. 25,000 இழப்பீடு கிடைக்கும். இதில் 65% தொகையை ரிசர்வ் வங்கியும், தலா 10% தொகையை சம்பந்தப்பட்ட வங்கிகளும் ஏற்கும். ரூ. 50,000 வரையிலான மோசடிகளுக்கும் அதிகபட்சமாக ரூ. 25,000 வரை இழப்பீடு வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
இழப்பீடு மட்டுமின்றி, மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் 'மியூல்' கணக்குகளை கண்டறிய 'MuleHunter.AI' என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் ஆர்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகளை துல்லியமாக கண்காணிக்கும். இழப்பீடு மற்றும் நவீனத் தொழில்நுட்பம் ஆகிய இந்த இருமுனை உத்தி, டிஜிட்டல் பொருளாதாரத்தில் மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
Contact to : xlf550402@gmail.com
Copyright © boyuanhulian 2020 - 2023. All Right Reserved.