சூடான் நாட்டில் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரால் கடந்த சில வருடங்களாகவே கடுமையான பஞ்சம் நிலவுகிறது. ஒருவேளை உணவுக்கு அந்நாட்டு மக்கள் தவித்து வருகிறார்கள். ஆப்பித்த நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 2023ம் வருடம் உள்நாட்டு போர் துவங்கியது. அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் இந்த அதிகார போர் மோசமான உணவு பஞ்சத்திற்கு அந்நாட்டு மக்களை தள்ளியிருக்கிறது..



கோடிக்ணக்கான மக்கள் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.. இப்போதைய கணக்கின்படி 2.6 கோடி பேர் கடுமையான பஞ்சத்தில் இருக்கிறார்கள்.. போர் தொடங்கியது முதல் இதுவரை பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர்.. அந்நாட்டில் இருந்த நூறு மருத்துவமனைகளில் 80 மருத்துவனைகள் தற்போது செயல்பாட்டில் இல்லை.. எனவே போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது நிலை இருப்பதால் பலரும் உயிரிழந்து வருகிறார்கள்.



கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் தங்களின் வீடு மற்றும் சொத்துக்களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.. அதில் பலரும் பக்கத்து நாடான சாட் மற்றும் எகிப்திற்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள்..



சூடானில் விவசாய நிலங்கள் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டன.. கடைகளுக்கு செல்லும் பாதைகளும் துண்டிக்கப்பட்டதால் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை.. வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகளையும் ராணுவம் தடுத்து விடுகின்றன.. இதனால் உணவு சாப்பிடாமல் அங்கு குழந்தைகள் கூட எலும்பும் தோலுமாக தோற்றமளிக்கிறது.



விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதாலும் உணவு சந்தைகள் மூடப்பட்டதாலும் இந்த நிலை வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் சர்வதேச நிறுவனங்களுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அங்குள்ள சமூக சமையல் கூடங்களும் மூடப்பட்டிருக்கிறது

பசியால் வாடும் மக்கள் மரங்களின் இலை தழைகளையும், கால்நடை தீவனங்களையும் சாப்பிட்டு உயிர் வாழும் அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Contact to : xlf550402@gmail.com


Privacy Agreement

Copyright © boyuanhulian 2020 - 2023. All Right Reserved.