தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் தற்போது தேர்தல் பணிகளின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாட்டில் நிச்சயம் தமிழக வெற்றி கழகம் தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்று விஜய் திட்டவட்டமாக கூறிவரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


இந்த நிலையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பேசுவது தற்போது அவருக்கு எதிராகவே மாறுவது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. நடிகர் விஜய் தன் பின்னால் தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தியும் அதனை ரசிகர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களை தற்குறிகள் என பல அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதனை உணர்த்தும் விதமாக தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் என கூறும் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நடிகர் விஜய்யின் சர்க்கார் படத்தில் ஆளும் கட்சிக்கு செல்வாக்கு குறையும் போது வரலட்சுமி சிம்பதி வாக்குகளை பெறுவதற்காக அவரது தந்தையை கொலை செய்து விடுவார். அதேபோன்று தற்போது தமிழ்நாட்டிலும் ஒரு சம்பவம் நடந்தாலும் நடக்கலாம்.


எனவே மக்கள் இதையெல்லாம் நம்பக்கூடாது நன்றாக சிந்தித்து நம்முடைய தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஓட்டு போட வேண்டும் என்றார். மேலும் அந்த வீடியோவில் வரலட்சுமி தன் தந்தையை கொன்றது போல் தற்போது நடக்கலாம் என அவர் கூறும் போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் புகைப்படம் அதை உணர்த்துமாறு ஏஐ வடிவில் சித்தரிக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 





 













View this post on Instagram























 


A post shared by Coimbatore Blogger (@coimbatore_guru)