பொதுவாக நம் உடல் நாம் அன்றாடம் சாப்பிட மறந்த பல உணவு பொருட்கள் உள்ளன .அவற்றில் கோதுமை புல் ,கவுனி அரிசி ,பழைய சாதம் மற்றும் ஜவ்வரிசி ,இந்த ஜவ்வரிசியை நம் வீட்டில் பண்டிகையின்போது பாயசம் செய்து சாப்பிடுவோம் ,அந்த வகையில் அதன் மூலம் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று பாக்கலாம் 


1.நம் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் ஜவ்வரிசி உடல் செரிமானத்தை ஊக்குவித்து உடலுக்கு சக்தியை அளிக்கிறது. 
2.சிலருக்கு வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் .இப்படி உள்ள நேரத்தில் ஜவ்வரிசியை சாப்பிட்டால் உடனே நின்று விடும். 
3.சிலர் உடல் எடை குறைக்க முயற்சிப்பர் ,அதனால் ஜவ்வரிசி பசியில் அடக்கும் தன்மை உள்ளது.
4.இந்த ஜவ்வரசி கொண்டு ஜாம் எப்படி செய்வது என்று பின்வருமாறு பாக்கலாம் 
5.முதலில் 1 கப் ஜவ்வரிசியை நன்கு கழுவி விட்டு ,அதை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்.
6.பின்னர் ஊறவைத்த ஜவ்வரிசியை வடிகட்டி கொண்டு ,அதை  மிக்ஸ்யில் லேசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
7.பின்னர் ஒரு வாணலியில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
8.அந்த தண்ணீர் கொதிக்கும் போது 1 சிட்டிகை உப்பு,2 டேபிள் ஸ்பூன் ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
9.பின் அந்த கலவையில்  சர்க்கரையை சேர்த்து கொண்டு ,அதை நன்கு கரையும் வரை கலந்து விடவும்.
10.சர்க்கரை கரைந்தவுடன் ஊறவைத்து அரைத்து வைத்துள்ள ஜவ்வரிசியை அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
11.அந்த ஜவ்வரிசியுடன்  பாதம்,முந்திரி,திராட்சை,ஏலக்காய்  ஆகியவற்றையும் சேர்க்கவும்.
12.நன்கு  கிளறி ஜாம் பதத்திற்கு வந்தவுடன் இறக்கினால், சுவையான சத்தான ஜவ்வரிசி ஜாம் ரெடி.இது நம் உடல் நலத்திற்கு நன்மை செய்யும்

Contact to : xlf550402@gmail.com


Privacy Agreement

Copyright © boyuanhulian 2020 - 2023. All Right Reserved.