திருவள்ளூர் மீஞ்சூரில் மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள வல்லூரில் 17 வயது கல்லூரி மாணவி நேற்று இரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின் வழியாக ஏறிவந்த அடையாளம் தெரியாத மூணு பேர் திடீரென அவரை கத்தியால் வெட்டியிருக்கிறார்கள்.. அதில் அவரின் கை, நெற்றி, பின் தலை போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது..



அந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பெண்ணின் வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்த போது அந்த மூணு பேரும் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தனர்.. அதில் ஒருவனை மட்டும் பொதுமக்கள் பிடித்து விட்டனர். அப்போது அவன் போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.



உடனடியாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.. அப்போது அந்த நபர் அக்கிபட்டு பகுதியை சேர்ந்து டெல்லி பாபு என்பது தெரிய வந்திருக்கிறது. தற்போது அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



எதற்காக இந்த சம்பவம் நடந்தது? தப்பிச்சென்ற இருவர் யார்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. கல்லூரி மாணவி வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.. கடந்த சில வருடங்களாகவே திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது. போலீசார் அதை ஒடுக்கவேண்டும், கல்லூரி மாணவி வெட்டப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Contact to : xlf550402@gmail.com


Privacy Agreement

Copyright © boyuanhulian 2020 - 2023. All Right Reserved.