விண்ணைத்தாண்டி வருவாயா


கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு த்ரிஷா நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். முழுக்க முழுக்க ரொமான்ஸ் படமான இது சிம்புவின் கரியரில் பெயர் சொல்லும் படமாக அவருக்கு அமைந்தது. சிம்பு த்ரிஷா கெமிஸ்ட்ரி , ரஹ்மானின் இசை சேர்ந்து 90 ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு காதல் காவியம் விண்ணைத்தாண்டி வருவாயா. கடந்த சில ஆண்டுகள் முன்பு இப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை அன்னா நகரில் உள்ள வி.ஆர் மாலில் கடந்த மூன்று ஆண்டுகளாக இப்படம் தினசரி ஒரு காட்சி திரையிடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இப்படத்திற்கு புதுப் புது பார்வையாளர்கள் வந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.


அந்த வகையில் வி.ஆர் மாலில் இப்படம் வெற்றிகரமாக 1000 ஆவது நாளை கடந்துள்ளது . இந்த தகவலை திரையரங்க நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுவரை அதிக நாட்கள் திரையரங்கில் ஓடிய படம் என்றால் ஷாருக் கஜோல் நடித்த தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே. திரையரங்கில் மொத்தம் 1000 வாரங்கள் இந்த படம் திரையிடப்பட்டது குறிப்பிடத் தக்கது. 








Contact to : xlf550402@gmail.com


Privacy Agreement

Copyright © boyuanhulian 2020 - 2023. All Right Reserved.