ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் 101 ரன்கள் அடித்துத் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். இளம் வயதில் இவ்வளவு பெரிய சாதனை செய்ததற்குப் பின்னணியில், அவரது சிறு வயது ஆர்வமும், தந்தை சஞ்சீவின் உறுதிப்பாடும் முக்கிய பங்கு வகிக்கின்றன.


இந்நிலையில் அவர் சதம் அடித்ததும் அதனை கொண்டாட, ராஜஸ்தான் அணியின் ஆலோசகரர் ராகுல் டிராவிட் வீல் சேரில் இருந்து எழுந்து கைதட்டி கொண்டாடினார். அதற்கு காரணம் வைபவை ராஜஸ்தான் அணிக்குள் கொண்டு வந்தது அவர்தான். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 14 வயதான வைபவ் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.


இதன் பின்னணியில் டிராவிட் தான் இருக்கிறார். ட்ராவிட் எப்படி வைபவ் வளர்ச்சிக்கு முக்கிய காரணமோ, அதேபோன்று முன்னாள் வீரர் வி வி எஸ் லட்சுமணனும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய ரோல் வகிக்கின்றார். ரஞ்சிக்கோப்பையில அறிமுகமான வைபவ் பிசிசிஐ நடத்திய யூ 19 சேலஞ்சர் போட்டியிலும் பங்கேற்றார்.


அப்போது தான் வைபவ் முதல் முறையாக விவிஎஸ் லட்சுமணனை நேரில் சந்தித்திருக்கிறார். அப்படி ஒரு நாள் இந்திய அணிக்காக களம் இறங்கிய வைபவ் 49 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த அவுட்டானார். அதன் பின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று அவர் பெரிய ஸ்கோர் அடிக்கும் வாய்ப்பு இழந்ததை நினைத்து அழதுள்ளார்.


இதையடுத்து வைபவை சமாதானப்படுத்த சென்ற லக்ஷ்மணன் இங்கே நாங்கள் ரண்களை மட்டும் பார்க்கவில்லை. நீண்டகாலம் அணிக்காக விளையாடும் திறமை உள்ளவர்களையும் நாங்கள் விரும்புகிறோம் என்று அவரைத் தேற்றி இருக்கிறார். அப்போது வைபாவுக்கு 12 வயது.


போட்டிகளில் ரன்கள் எடுப்பதில் கொண்டிருந்த ஆர்வத்தால் ஏற்கனவே கவனத்தை ஈர்த்த வைபவின் திறமையை உணர்ந்த லட்சுமணன் ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பரிந்துரைத்தார். அப்படித்தான் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட வைபவ் காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விளையாட முடியாத நிலையில் ஓப்பனிங் இறங்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

Read more
தங்கத்தை விடுங்க.. குரங்கை கடத்தி இருக்காங்க.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
Abplive
Ajithkumar Lockup Death: மிருகமான காவலர்கள் - 50 காயங்கள், சிகரெட் சூடு, கட்டையால் தாக்குதல் - அஜித்குமார் கொடூரக் கொலை
Abplive
சூர்யா சேதுபதியை சந்தித்த விஜய்...ஃபீனிக்ஸ் படம் பார்த்து என்ன சொன்னார் தளபதி
Abplive
படம் கூரையை பிச்சுட்டு போகும்...சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் அப்டேட் கொடுத்த சாய் அப்யங்கர்
Abplive
Diago Jota : திருமணமாகி 10 நாள்.. நண்பனை இழந்துட்டேன்.. வேதனையில் ரொனால்டோ...விபத்தில் பிரபல கால்பந்து வீரர் மரணம்
Abplive
Coolie Aamir Khan: மிரட்டாலா இருக்கே! அமீர்கான் பெயர் இது தானா. கூலி படத்தின் புதிய அப்டேட்..
Abplive
ஏபிபி நாடு செய்தி எதிரொலி - தமிழக முதல்வரை விமர்சித்து அதிமுக போட்ட ட்வீட்...
Abplive
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
Abplive
Phoenix Movie Review : அப்பா பெயரை காப்பாற்றினாரா சூர்யா..ஃபீனிக்ஸ் படம் எப்படி இருக்கு..இதோ விமர்சனம்
Abplive
பாலியல் வழக்கில் சிறைசென்ற ஜானி மாஸ்டருடன் வைப் செய்த விக்னேஷ் சிவன்..வெளுத்து வாங்கிய சின்மயி
Abplive