வெளியூர் சென்ற பெற்றோர்
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் மூன்றாவது லிங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹித்தேஷ் ( வயது 26 ). இவர் மேற்கண்ட முகவரியில் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
எம்.கே.பி நகர் பகுதியில் சொந்தமாக துணிக்கடை வைத்து இவரும், இவரது தந்தையும் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் ஹித்தேஷன் தந்தை மற்றும் தாய் இருவரும் உறவினர் திருமணத்திற்காக பெங்களூர் சென்றுள்ளனர்.
ஆட்டோவில் வந்த நபர்கள்
இந்த நேரத்தில் ஹித்தேஷ் கிரிண்டர் என்ற தனியார் செயலி மூலம் ஏற்கனவே பழக்கமான நபர் ஒருவரை உல்லாசத்திற்காக வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஹித்தேஷ் அழைத்த நபர் மற்றும் அவருடன் ஒரு ஆண், ஒரு பெண் என மூன்று பேர் ஆட்டோவில் ஹித்தேஷ் வீட்டிற்கு வந்துள்ளனர். வந்த நபர்கள் ஹித்தேஷை பாத்ரூமில் அடைத்து வைத்து விட்டு வீட்டிலிருந்த சுமார் 30 சவரன் தங்க நகை மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
நகை திருட்டு - மாறி மாறி சொன்ன தகவல்
அவர்கள் சென்றவுடன் ஹித்தேஷ் பாத்ரூமில் இருந்து வெளியே வந்து இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எம்.கே.பி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஹித்தேஷ் திருடு போன பொருட்கள் குறித்து மாறி மாறி கூறுவதால் உண்மையிலேயே 30 சவரன் நகை திருடு போய் உள்ளதா ? அல்லது குறைவான அளவில் நகைகள் திருடு போய் உள்ளதா ? என்பது குறித்தும் எம்.கே.பி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து , வந்த மூன்று பேர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் படுத்து உறங்கிய நபர் லாரி மோதி உயிரிழப்பு
சென்னை கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 30 ) இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் ஆறு வயது மகன் சந்தோஷ் உடன் மேற்கண்ட முகவரியில் தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் குப்பைமேடு பகுதியில் குப்பைகளை சேகரித்து அதனை பழைய இரும்பு கடையில் போட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார் . குடிபோதைக்கு அடிமையான விஜய்குமார் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது பெற்றோர்களிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
குடிபோதையில் வீட்டிற்கு வந்த விஜயகுமார் பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு குப்பை மேட்டிற்க்கு சென்று படுத்து உறங்கி உள்ளார். குப்பைமேடு பகுதியில் குப்பை சேகரிக்க சென்ற நபர்கள் பார்க்கும் போது அடையாளம் தெரியாத குப்பை லாரி மோதி உடல் நசிங்கி உயிரிழந்த நிலையில் விஜயகுமார் இருந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு நேரங்களில் குப்பை கொட்ட வரும் குப்பை லாரி விஜயகுமார் மீது ஏறி இறங்கி இருக்கலாம் இதில் குடிபோதையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த விஜயகுமார் உயரிழந்திருக்கலாம் என தெரிய வருகிறது.
போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து எந்த லாரி விஜயகுமார் மீது ஏறி இறங்கியது என்பது குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.