நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் கமல் இணைந்துள்ள படம் தக் லைஃப் . த்ரிஷா , அபிராமி , சிம்பு , ஜோஜூ ஜார்ஜ் , அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதுவரை மணிரத்னம் ரஹ்மான் காம்போவில் வெளியான பாடல்கள் அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதே மேஜிக் தக் லைஃப் படத்திலும் மிக சிறப்பாக நடந்துள்ளது என்று சொல்லலாம்.
தக் லைஃப் படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கமல் எழுதிய 'ஜிங்குச்சா' மற்றும் ரஹ்மான் எழுதிய ' சுகர் பேபி ' ஆகிய இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இவை தவிர்த்து ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 6 பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன
கமலுக்கு புகழாரம் வழங்கும் விதமான உருவாகியிருக்கும் பாடல் 'வின்வெளி நாயகா'. கார்த்திக் நேத்தா இந்த பாடலை எழுதியுள்ளார். ஸ்ருதி ஹாசன் , பிரசாந்த் வெங்கட் , ஏ.ஆர் அமீன் இந்த பாடலை பாடியுள்ளார்கள். பாடல்களின் இடையில் கமலின் குரல் இந்த பாடலின் ஹைலைட் எனலாம்.
தக் லைஃப் மொத்த ஆல்பத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடலாக முத்த மழை பாடல் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சிவா ஆனந்த் எழுதி தீ இந்த பாடலை பாடியுள்ளார். இந்தியில் பல சூஃபி பாடல்களை இசையமைத்துள்ள ரஹ்மான் தமிழில் ஒரு சிறந்த சூஃபி பாடலை தக் லைஃப் படத்தில் கொடுத்திருக்கிறார்.
தந்தை மகன் இடையில் நடக்கும் உணர்ச்சிவசமான கதை தக் லைஃப். அந்த தந்தை மகன் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக ரஹ்மான் நிகழ்த்தியிருக்கும் மாயம்தான் அஞ்சு வண்ண பூவே . கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்த பாடலை சாருலதா மணி மற்றும் ரஹ்மான் என இருவரும் தனித்தனியாக பாடியுள்ளார்கள்.
இன்றைய தலைமுறையினருக்கு இன்ஸ்டண்டாக கனெக்ட் ஆகும் விதத்தில் அமைந்துள்ள பாடல் ஓ மாரா. பிரபல ராப்பர் பால் டப்பா இந்த பாடலை எழுதி பாடியுள்ளார். சிம்பு ரசிகர்களுக்கு இந்த பாடல் திரையரங்கில் ஒரு செம வைப் மெட்டிரியலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்
சிவா ஆனந்த் எழுதி ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ள பாடல் 'எங்கேயோ'.
Thoughts For Tommorrow என்பவர் எழுதி பாடியுள்ள ஆங்கில ராப் பாடல்.