12 - ஆம் வகுப்பு தேர்வு முடிந்துள்ளது மாணவ மாணவிகள் அனைவரும் தங்களுடைய கனவுகளை சுமந்து கொண்டு, அவர்களுடைய படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிகளவு வேலை வாய்ப்புகள் நிறைந்த துறையாக கால்நடைத்துறை இருந்து வருகிறது. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும் கால்நடை துறை இருந்து வருகிறது. அந்த வகையில் பி.வி.எஸ்.சி - ஏ.எச் உள்ளிட்ட கால்நடை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, தலைவாசல் ,உடுமலைப்பேட்டை, ஒரத்தநாடு, தேனி ஆகிய ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன .
இந்த கல்லூரிகளில் ஐந்தாண்டு படிப்பான பி.வி.எஸ்.சி - ஏ.எச் கால்நடை மருத்துவ மற்றும் பராமரிப்பு படிப்புகள் இடம் பெற்றுள்ளன.மொத்தம் ஏழு இடங்களில் 660 இடங்கள் உள்ளன.
இதேபோன்று கிருஷ்ணகிரி ஓசூரில் உள்ள கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி உள்ளிட்டவைகளில் நான்கு ஆண்டு பி டெக் இளநிலை உணவுத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகள் உள்ளன.
இதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் பல்வேறு பி டெக் சார்ந்த படிப்புகள் உள்ளன. இவற்றுக்கும் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கால்நடைத்துறை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
இவற்றில் 7.5% அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது.
இந்த கால்நடைத்துறை மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிப்பதற்கு 12ஆம் வகுப்பு தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்பில் சேர விரும்புபவர்கள் இன்று காலை 10 மணி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கால்நடைத்துறை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதியாக ஜூன் 20 மாலை 5 மணிவரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.