தெலங்கானா அரசு சார்பில் சிறந்த நடிகர் விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட உள்ளது. துணை நடிகராக எஸ்.ஜே. சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர அரசு சார்பில் திரைப்படக் கலைஞர்களுக்கா ஆண்டுதோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்த பிறகு திரைத் துறை விருதுகள் தெலங்கானா சார்பில் வழங்கப்படவில்லை.



இந்நிலையில், அம்மாநிலத்தின் சிறந்த நாட்டுப்புற பாடல் கலைஞரான மறைந்த கத்தர் பெயரில் திரைத் துறை விருதுகளை வழங்க அம்மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதற்காக நடிகை ஜெயசுதா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் மாநிலம் உருவான கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படம் என்ற ஒரு பிரிவில் மட்டும் ஆண்டுக்கு ஒரு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.


இதன்படி, சிறந்த திரைப்படங்கள் பட்டியலை ஜெயசுதா தலைமையிலான குழு நேற்று அறிவித்தது. அதேநேரம், 2024-ம் ஆண்டுக்கு மட்டும் 14 பிரிவுகளில் சிறந்த விருது பெறுவோர் பட்டியலை இக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி 2024-ல் வெளியான கல்கி 2898 திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குநராக இப்படத்தை இயக்கிய நாக் அஷ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2-வது சிறந்த திரைப்படமாக பொட்டேல், 3-வது சிறந்த திரைப்படமாக லக்கி பாஸ்கர் திரைப்படமும் தேர்வாகி உள்ளது.



சிறந்த நடிகர் விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட உள்ளது. இவர் புஷ்பா-2 திரைப்படத்துக்காக இவ்விருதினை பெற உள்ளார். சிறந்த நடிகையாக நிவேதா தாமஸ் (35 இதி சின்ன கத காது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகராக எஸ்.ஜே. சூர்யா (சரிபோதா சனிவாரம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மேலும், சிறந்த பாடகராக சித் ஸ்ரீராமும், சிறந்த பாடகியாக ஸ்ரேயா கோஷலும், தேர்வாகி உள்ளனர். தெலுங்கு திரைப்படம் மட்டுமின்றி சிறந்த உருது திரைப்படத்துக்கும் வரும் ஜூன் 14-ம் தேதி, தெலங்கானா அரசு 21 விருதுகளை வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





Read more
விஜய்க்கு செல்வாக்கு இருக்கா? இல்லையா? மகன் மிதுன் கொடுத்த ரிப்போர்ட்- ஈபிஎஸ் கணக்கு இதுதான்!
Abplive
அடி தூள்... இந்த பள்ளிக் கல்வி ஊழியர்களுக்கெல்லாம் ஊதிய உயர்வு- பட்டியல் போட்ட அரசு!
Abplive
காஞ்சிபுரம் மாணவர்கள் சாதனை! மீனவர்களுக்காக பாதுகாப்பு பெல்ட், ஆசிரியருக்காக தொப்பி: ஆட்சியரின் பாராட்டு!
Abplive
Sattamum Needhiyum Review : சரவணன் நடித்து ஓடிடியில் வெளியாகியிருக்கும் சட்டமும் நீதியும்...விமர்சனம் இதோ
Abplive
மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவைக்கு டாக்டர் பட்டம் வென்ற அருணாசலம் முருகாநந்தம்
Abplive
பள்ளி கட்டிடங்கள் இடிந்துவிழும் அவலம்; திமுக அரசின் அலட்சியம் காரணமா? சாடிய அண்ணாமலை
Abplive
விஜய்க்கு கட்சி துவங்கும் தைரியம் வந்தது அப்படிதான்...இயக்குநர் பார்த்திபன் என்ன இப்படி சொல்லிட்டார்
Abplive
தாய்லாந்தில் நடக்கும் பன்னாட்டு மாணவர் மாநாட்டில் பங்கேற்கும் தஞ்சை மாணவிக்கு பாராட்டு
Abplive
Bengaluru Traffic: “தோழி துபாய்க்கே போய்ட்டா! நான் இன்னும் வீட்டுக்கு போகல” – வைரலாகும் பெங்களூரு பெண் பதிவு!
Abplive
விஜய் மீது இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி புகார்.. ஆபாசமாக பேசும் தொண்டர்கள்.. பரபரப்பு
Abplive