இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியிருக்கிறார். 'மதயானைக்கூட்டம்', 'இராவணக்கோட்டம்' ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரனின் மறைவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் விக்ரம் சுகுமாரன். 2013-ம் ஆண்டு 'மதயானைக்கூட்டம்' திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


Vikram Sugumaran with Shanthanu

இதைத் தொடர்ந்து, சாந்தனுவை கதாநாயகனாக வைத்து 2023-ம் ஆண்டு 'இராவணக்கோட்டம்' படத்தை இயக்கியிருந்தார் விக்ரம்.


இதைத் தாண்டி, வெற்றிமாறனின் 'ஆடுகளம்' திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.


கடந்த 2017-ம் ஆண்டு, சசிகுமாருடன் 'கொடிவீரன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம் சுகுமாரன்.


விக்ரம் சுகுமாரன் உயிரிழந்த தகவலைப் பகிர்ந்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷாந்தனு பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "உங்களிடமிருந்து பலவற்றைக் கற்றிருக்கிறேன்.



அந்தத் தருணங்களெல்லாம் என்றும் என் நினைவில் இருக்கும். சீக்கிரமாக எங்களை விட்டுப் பிரிந்துவிட்டீர்கள்," எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். இவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read more
269 ரன்கள் ஒரு மேட்டரே இல்லை.. ஒன்றல்ல இரண்டல்ல 13 சாதனைகளை முறியடித்த சுப்மன் கில்லின் தில்லான பேட்டிங்..
Newspoint
உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்..!
Newspoint
கொஞ்சம் கூட அறிவே இல்லையா? தோல்வி அடைந்ததும் நடுவிரலை காட்டி அவமதித்த பாகிஸ்தான் வீராங்கனை.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!
Newspoint
“பும்ரா பேரை அழைக்கும் வேலையா? சிராஜ் போட்ட சவால் – ரசிகர்கள் கொண்டாடும் 'DSP சிராஜ்' பாஸ்!”
Newspoint
வலுவான நிலையில் இந்தியா! பும்ரா இல்லாமல் சாதித்துக் காட்டிய சிராஜ், ஆகாஷ்
Newspoint
தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து..!
Newspoint
அப்போ ஐபிஎல் இப்ப டெஸ்ட்..! கிரிக்கெட் மேட்ச்சில் தனி ஸ்டைல் போல..! ரிஷப் பண்ட் அடிச்ச வேகத்துல பந்தோடு சேர்ந்து பறந்த பேட்… 2 தடவையும் நடந்தது ஒன்னுதான்… வீடியோ வைரல்..!!
Newspoint
“மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய 14 வயது இளம் புயல்”… U-19 போட்டியில் சதம் அடித்து அசத்தல்… உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்சி…!!!
Newspoint
ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்... தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!
Newspoint
தாய், குழந்தையை கொலை செய்து நாடகம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்!
Newspoint