தமிழ் சினிமாவில் தன்னை ஒரு காமெடியனாக நிலை நிறுத்திக் கொண்ட சூரி இப்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரும்பாலும் ஹிட் படங்களாகவே மாறி உள்ளன. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் திரைக்கு வந்த விடுதலை படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 


சூரியை ஒரு மாஸ் ஹீரோவாக இந்த படம் காட்டியது. இப்படியொரு ஹீரோவை தமிழ் சினிமா எப்படி காமெடி நடிகராக காட்டியது என்று சொல்லும் அளவிற்கு சூரியின் ஹீரோ அவதாரம் இருந்தது. இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு விடுதலை 2, கொட்டுக்காளி, கருடன் ஆகிய படங்கள் சூரியை முழு நேர ஹீரோவாக மாற்றியது. கடைசியாக சூரியின் நடிப்பில் வெளியான படம் தான் 'மாமன்'. ஏற்கனவே மாஸ் ஹீரோவாக தன்னை காட்டிய சூரிக்கு 'மாமன்' படம் அக்கா தம்பி பாசத்தின் வெளிப்பாடாக அமைந்தது.




இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார். சூரிக்கு ஜோடியாக, இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, சுவாசிகா, பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மே 16ஆம் தேதி திரைக்கு வந்த சிறிய பட்ஜெட் படம் தான் மாமன். தாய் மாமனுக்கும், அக்காவின் மகனுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் 'மாமன்' படத்தின் கதை. 


விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படம் மொத்தமாக ரூ.40 கோடி வரையில் வசூல் குவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் மாமன் எப்போது ஓடிடிக்கு வரும் என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வரும் 13 ஆம் தேதி மாமன் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஜீ5 நிறுவனம் தான் மாமன் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

Read more
31 லிட்டர் பெட்ரோல் போட்ட நபர்…. “பைப்பை காரோடு இழுத்து சென்று…” பணம் கொடுக்காமல் தப்பி சென்ற பரபரப்பு சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
Newspoint
நாளை உலகமே இருளில் மூழ்கப் போகுது.. ஆனால் வெறும் 6 நிமிஷங்களுக்கு மட்டும்… நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!
Newspoint
சென்னை கிரைம்: அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி; தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்
Abplive
ஆம்புலன்ஸ் மீது மோதிய லாரி..நோயாளி பரிதாப பலி..! மயிலாடுதுறை அருகே சோக சம்பவம்
Abplive
தங்கம் விலையில் மாற்றம்..! 2வது நாளாக குறைந்த விலை..!
Newspoint
ஆகஸ்ட் 9 வரை தரிசிக்க அனுமதி... அமர்நாத்தில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
Newspoint
திண்டிவனம் முதல் நாகர்கோவில் வரை.. புதிய ரயில்வே திட்டங்கள்.. தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட்
Abplive
இடப்பிரச்சினையில் விவசாயி அடித்து கொலை: தஞ்சாவூர் அருகே பரபரப்பு
Abplive
ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்..!!
Newspoint
சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?
Newspoint