தேமுதிக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் கடந்த 6-ம் தேதி மனு தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுகவைச் சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரின் பதவி காலம் ஜூலை 24ஆம் தேதி உடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் இந்த காலி இடங்களுக்கு தற்போது தேர்தல் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்கள் அவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில் பி வில்சன், எஸ் ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் திமுக கூட்டணியில் ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கி 9ம் தேதி முடியும் என்றும், 10-ம் தேதி வேப்புமனு மீது பரிசீலனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்று தமிழ்நாட்டில் இருந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளன.
திமுக சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால், மநீம தலைவர் கமல்ஹாசன், 7 சுயேட்சைகள் என மொத்தமாக 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு இல்லை என்றால் வேர்ப்பு மனு நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.