பேராசியர் நிகிதா மீது கல்லூரியில் பண மோசடி வழக்கு முதல் அஜித்குமார் வழக்குவரை கடந்து வந்த பாதையில் பல்வேறு புகார் உள்ளது, தெரியவந்துள்ளது.



திருப்புவனத்தில் நடைபெற்ற லாக்கப் டெத் மரணம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தை சேர்ந்த, கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடிதாங்க முடியாமல் இறந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை நீதித்துறை முன்னெடுத்துள்ளது. இந்த சூழலில் அஜித்குமாரின் வழக்கில் முக்கிய புள்ளியும், புகார்தாரருமான 'நிகிதா' - என்ற பெண் பேசுபொருளாக மாறியுள்ளார்.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த நிகிதா. திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள எம். வி.எம்., அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில் தாவரவியல் துறைத்தலைவராக பணிபுரிந்து வருகிறார். அஜித்குமாரின் மரணத்துக்கு பின்பு, நிகிதா கல்லுாரிக்கு வரவில்லை என மாணவிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். பேராசிரியரான இவர் கடந்த 2010-ஆம் ஆண்டில் தனக்கு அரசியலில் முக்கிய நபர்கள் தெரியும், அவர்கள் மூலம் அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தரமுடியும் எனக் கூறி பலரிடம் வசூலில் ஈடுபட்டுள்ளார். திருமங்கலம் பச்சக்கோப்பன்பட்டியை சேர்ந்த பலரிடம் ரூபாய் 16 லட்சம் வரை வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாவும், பணத்தை பெற்ற உடன் வேலை வாங்கித்தராமல் தலைமறைவாகியுள்ளார். சிலர் பணத்தை திருப்பிக் கேட்டால் அவர்களை மிரட்டியுள்ளார். நிகிதாவிடம் பணம் ஏமாந்த ராஜாங்கம், தெய்வம், வினோத்குமார் உள்ளிட்டோர் திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது போன்ற புகாரின் அடிப்படையில் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் என 6 பேர் மீது 2011-ஆம் ஆண்டு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இது போன்ற பண மோசடி வழக்கு உள்ளதால் நிகிதா மீது அஜித்குமாரின் வழக்கின் பார்வையும் திரும்பியுள்ளது. நிகிதா பலரிடமும் பல லட்சங்களை பண மோசடி செய்ததாக காவல்நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.



நிகிதாவின் தந்தை மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதனால் பார்வர்டு பிளாக் கட்சி யில் இருந்து பிரிந்து அதே பெயரில் கட்சித் தொடங்கியுள்ளவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது தான் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்று சொல்லி, தான் திருமணம் செய்துள்ளார். அவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்தவுடன் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் 28 நாளில் இருவரும் பிரிந்துவிட்டனர். இதனால் நிகிதாவிற்கு பல வி.ஐ.பி.களுடன் நட்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதை வெளியில் காட்டி பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.



இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் வழக்கில், காரை நிறுத்தும் போது, கார் பார்க்கிங்கிற்கு ரூ.500 வேண்டும் என்று காவலாளி அஜித்குமார் கேட்டு கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் நிகிதாவை அஜித்குமார் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி நகையே தொலையாமல், நகையைக் காணவில்லை என்று பொய்யான புகாரை கொடுத்து, அஜித் குமாரை தாக்க வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட எஸ்.பிக்கே தெரியாமல், இந்த சம்பவம் அரங்கேயுள்ளது. இதனால் முக்கியமானவராக பார்க்கப்படுவது, மானாமதுரை டிஎஸ்பியைத்தான். இதனால் இந்த விவகாரத்தில் அவரிடம் விசாரணை நடத்தினால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும், என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் நிகிதா மீது கடந்த சில நாட்களாக தொடர் புகார்கள் வாசிகப்படுகிறது. மேலும் காவல்நிலையங்களிலும் புகார் அளிக்கப்படுகிறது. நிகிதா கல்லூரியில் பணியாற்றும் சமயங்களில் அவர் மீது புகார்கள் இருந்துள்ளது. மேலும் இறந்த அஜித்குமார் குடும்பத்தினர் புகாரிலும் நிகிதா வலுவாக சிக்கியுள்ளார். இதனால் நிகிதா எதேனும் வழக்கில் கைது செய்ய வாய்ப்பு உள்ளதா? என கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் நிகிதா தானாக வந்து சரணடையவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Read more
“தமிழகத்துக்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம்..” அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
Newspoint
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய லக்கி லக்கி எரிமலை.. 20 கிலோ மீட்டர் தூரம் வரை வெளியாகும் தீக்குழம்பு!
Newspoint
பொண்ணுங்க கோபப்பட்ட நாடு தாங்காதுன்னு சும்மாவா சொல்றாங்க…! காட்டுக்கு ராஜா சிங்கத்துக்கே இந்த நிலைமையா..? ஓட ஓட விரட்டிய பெண் சிங்கம்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!!!!
Newspoint
என் புள்ளை மேலையே நீ கை வைப்பியா…? சிங்கமாக மாறிய பசுமாடு… கொம்பை பார்த்தே பயந்து ஓடிய சிறுத்தை… உயிர் பிழைத்த கன்று குட்டி… வைரலாகும் வீடியோ…!!!
Newspoint
செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி: நூதனப் போராட்டத்தில் எதிரொலித்த தமிழினப் படுகொலை! நீதி கிடைக்குமா?
Abplive
ஒடிசா: 15 வயது பெண் உயிரோடு எரிப்பு; 'தற்கொலையா? கொலையா?' - பெண்ணின் தந்தை சொல்வது என்ன?
Newspoint
Siragadikka aasai: அம்மா என உளறிய கிரிஷ்… அடுத்த சம்பவத்திற்கு தயாராகிறாரா ரோகிணி?
Newspoint
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்.. களைகட்டிய தாய் மாமன் தின கொண்டாட்டம்!
Newspoint
“2 வருஷத்துக்கு முன் திருமணம்”… ரூ.5 லட்சத்துக்காக மனைவியை உயிரோடு தீயில் கருக்கிய கணவன்… வரதட்சணை கொடுமையால் மீண்டும் ஒரு பெண் பாதிப்பு…!!!!!
Newspoint
“6 முறை Call பண்ணீங்களா”… லெட்டர் இன்னும் வரல… அவர் ஒரு முடிவு எடுத்துட்டாரு… ஆனால் ஆதாரம் இருக்காது… ஓபிஎஸ்-க்கு நயினார் நாகேந்திரன் பதிலடி…!!!
Newspoint