தமிழில் கடந்த 2026 ஜனவரி மாதத்தின் இறுதியில் முடிவடைந்த ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்துகொண்டு, விளையாடியிருந்தனர். இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக சீரியல் நடிகை திவ்யா கணேஷ் (Divya Ganesh) வெற்றி பெற்றிருந்தார். மேலும் முதல் ரன்னராக சபரி வெற்றி பெற்றிருந்தார். இந்த சீசனானது, இதுவரை வெளியான சீசன்களிலே அதிகம் பேசப்பட்டதாகும். இதில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு, அனைத்து புரோமோக்களிலும் வந்தவர்தான் வி.ஜே.பார்வதி (VJ.Parvathy). இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் முன், தொகுப்பாளராக நிகழ்ச்சிகளில் பணியாற்றிவந்தார். அந்த விதத்தில் தனது முன்னேற்றத்திற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் இறுதி வாரத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார்.


அந்த விதத்தில் இவரும் அதை தொடர்ந்து இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து, பல்வேறு விஷயங்களுக்கு விமர்சனங்களை கொடுத்துவருகிறார். அந்த விதத்தில் இவர் தற்போது வெப் தொடர் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். அது எந்த வெப் தொடர் தெரியுமா?, விஜய் சேதுபதி (Vijay Sethupathi) கதாநாயகனாக நடித்துள்ள “முத்து என்கிற காட்டான்” (Muthu Engira Kaattaan) என்ற வெப் தொடரில்தான். இதில் அவர் லலிதா என்ற வேடத்தில் நடித்துள்ளார்.


இதையும் படிங்க: அரசன் படத்திற்கு ஏன் இசையமைக்கவில்லை? உண்மையை உடைத்த ஜி.வி. பிரகாஷ்!

காட்டான் வெப் தொடரில் நடிப்பது குறித்து வி.ஜே.பார்வதி வெளியிட்ட பதிவு:






View this post on Instagram









A post shared by Parvathy • பார்வதி (@vjpaaru)




நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள வித்தியாசமான கதைக்களம் கொண்ட வெப் தொடர்தான் முத்து என்கிற காட்டான். இதில் அவர் ஆக்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளாராம். இதை கடைசி விவசாயி படத்தய் இயக்கியிருந்த இயக்குநர் எம்.மணிகண்டன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன், வி.ஜே.பார்வதி, மிலிண்ட் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.


இதையும் படிங்க: ஏப்ரல் மாதம் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போனது த்ரிஷ்யம் 3 படம் – மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு


இந்த வெப் தொடரானது முற்றிலும் கிராமத்து கிரைம் திரில்லர் கதையில் தயாராகியுள்ள நிலையில், ஏற்கனவே ட்ரைலர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து இது வரும் 2026 மார்ச் 27ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் இந்த வெப் தொடருக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

Read more
Breaking: ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளருக்கு அமைச்சர் பதவிக்கு நிகரான அரசு பதவி… அதிரடி காட்டிய சிஎம் விஜய்… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!
Newspoint
Lingam Series Review : கதிரின் 'லிங்கம்' வெப் சீரிஸ் எப்படி இருக்கு?... ட்விட்டர் விமர்சனம்!
Newspoint
முதலீட்டு மோசடியில் சிக்கி ரூ1.23 கோடியை இழந்த வங்கி அதிகாரி.. ஷாக் சம்பவம்!
Newspoint
விமரிசையாக நடந்து முடிந்த சுந்தர்.சி - குஷ்பு மகள் திருமணம்... திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நேரில் பங்கேற்பு!
Newspoint
மதியிடம் கோபப்படும் மலர்… சிட்டிக்கு கோபம் வந்துடுச்சுப்பா!
Newspoint
மனோஜுக்கு இரண்டாவது பொண்டாட்டி ரெடி..! இது என்னடா புது ட்விஸ்ட்டா இருக்கு!
Newspoint
அந்த நடிகை மாதிரி என்னால் ஒருநாளும் செய்ய முடியாது – நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி
Newspoint
ஆங்கில இணையத் தொடரின் ரீமேக்கா ரஜினியின் தர்மன் ? அஸ்வத் மாரிமுத்து பதில்
Abplive
கப்சாவிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா...மாரத்தானில் விஜயை விட அதிக தூரம் ஓடிய ஜம்மு முதல்வர்!
Abplive
“எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
Abplive