முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் தவெக தலைவர் விஜய். அவரோடு 9 அமைச்சர்களும் பொறுப்பேற்கவுள்ளனர்.


கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான அருண் ராஜும் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்.


அருண் ராஜ் எப்படி அமைச்சர் ஆனார்?


தவெகவுக்குள் கட்சியைத் தாண்டி விஜய்க்கு பெர்சனலாக நெருக்கமானவர்கள் ஒரு சிலரே. அதில் அருண் ராஜும் ஒருவர். சேலத்தைச் சேர்ந்த மருத்துவரான அருண் ராஜ், 2010-11 வாக்கில் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஆர்.எஸ் ஆகினார்.


பதவியேற்பதற்கு முன்பான பயிற்சி காலத்தில் விஜய்யைச் சந்தித்திருக்கிறார். அப்போதிருந்தே விஜய்யுடனான நட்பைத் தொடர்ந்திருக்கிறார்.


அருண் ராஜ் | Arun Raj - TVK

விஜய் அரசியலுக்கு வரலாம் என யோசிக்கையில், அதை வெளிப்படையாகக் கூறி ஆலோசனைக் கேட்ட நபர்களில் அருண் ராஜும் ஒருவர். கட்சியின் வடிவமைப்பு, கொள்கை வகுப்பு என தவெக என்கிற கட்சி சிந்தனையாக இருந்த போதிலிருந்தே அதற்காகப் பங்காற்றியிருக்கிறார்.


அதனால்தான் கட்சிக்குள் வரும்போதே அவருக்கு முக்கிய பொறுப்பைக் கொடுத்தார் விஜய். தவெகவின் ஊடக முகங்களில் ஒருவராகவும் அருண்ராஜ் இருந்தார்.


இக்கட்டான கட்டங்களில் கட்சியின் நிலையை ஊடகங்களின் எடுத்துரைக்கும் சிக்கலான பணியைச் சிறப்பாகச் செய்தவர். மற்ற யாருக்கும் முன்பாக விஜய்யிடம் பேசி திருச்செங்கோடு தொகுதியைக் கேட்டு வாங்கி 5 மாதங்களாகப் பிரசாரம் செய்து கிராமப்புறமாக நிறைந்திருக்கும் அந்தத் தொகுதியை வென்று கொடுத்திருக்கிறார்.


விஜய்க்கு நெருக்கமானவர் என்பதால் வென்றால் அமைச்சரவை உறுதி என்கிற பேச்சு கட்சி வட்டாரத்துக்குள் ஏற்கனவே உண்டு. எதிர்பார்த்தபடியை வென்றுவிட்டதால் முன்னாள் வருவாய்த்துறை அதிகாரியான அவருக்கு அவர் சம்பந்தப்பட்ட வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறையையே விஜய் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழும்பூர்: திமுக-வின் கோட்டையில் மகுடம் சூடிய ராஜ்மோகன்! - திமுக சறுக்கியது எங்கே?
Read more
விஜயை சம்மதிக்க வைக்க படாத பாடுபட்ட இயக்குனர்.. அட அது சூப்பர்ஹிட் படமாச்சே!
Newspoint
#BREAKING : CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது..!
Newspoint
தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு.. முதல்வர் விஜய்யின் தீர்மானம் நிறைவேற்றி வெற்றிப்பெற்றது என அறிவிப்பு..
Newspoint
பதவியேற்பு விழாவில் கையெழுத்து போட மறுத்த முதல்வர் ரங்கசாமி! - 120 விநாடிகள் காத்திருந்தது ஏன்?
Newspoint
Vijay : '171 பேரில் 144 ஆதரவு வாக்குகள்' நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற தவெக! - அதிமுக ஆதரவு.?
Newspoint
"கூவத்தூரையே மிஞ்சுகிறது உங்கள் கூத்து; புஷ்பா படப்பாணியில்.!" - தவெகவை கடுமையாக சாடிய உதயநிதி
Newspoint
சட்டமன்றத்தில் விஜய் 'மாஸ்' வெற்றி! 22 பேர் எதிர்ப்பு; 5 பேர் நடுநிலை!
Newspoint
15-ம் தேதி ஆகப்போகுது… மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எங்கே? முதல்வர் விஜயிடம் உதயநிதி கேள்வி..!
Newspoint
“மனசாட்சி உள்ள மக்களாட்சி”.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் கர்ஜித்த முதல்வர் விஜய்..
Newspoint
தமிழகத்தில் எம்எல்ஏக்களை கடன் வாங்கி ஆட்சி நடத்தும் தவெக..! “இது புதிய ஆட்சி அல்ல புஷ்பா பட ஆட்சி”… திமுக கூட்டணி ஆதரவால் தான்… போட்டுத்தாக்கிய உதயநிதி…!!
Newspoint